Home சினிமா உலக சினிமாவில் இது அரிது.. ரஜினிக்கு குவியும் வாழ்த்துக்கள்

உலக சினிமாவில் இது அரிது.. ரஜினிக்கு குவியும் வாழ்த்துக்கள்

இன்று 70வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலக பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் சார்பாக சிடிபி வெளியிடப்பட்டுள்ளதால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அந்த சிடிபியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, சூப்பர் ஸ்டாரின் சிடிபியை வெளியிடுவது மிகப்பெரிய பாக்கியம். 70வது பிறந்தநாளை கொண்டாடும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க என் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

’’பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா!’’ என்று கூறியிருக்கும் நடிகர் ராகவேந்திரா லாரன்ஸ், ’’உங்களின் உடல் ஆரோக்கியத்துக்காக ராகவேந்திர சுவாமியைப் பிரார்த்திக்கிறேன். தங்களின் அனைத்து கனவுகளும் நனவாகட்டும். இந்த ஆண்டு உங்களுடையது! குருவே சரணம்’’ என்று சொல்லி இருக்கிறார்.

புன்னகைக்கும் கண்களுடன் சிரித்த முகமாக இருக்கும் உங்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களின் சிடிபியை வெளியிடுவதை பெருமையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் நடிகர் கீர்த்தி சுரேஷ்.

ஒரு பெண் ரசிகராக, எங்கள் அன்பான சூப்பர்ஸ்டாரின் 70 வது பிறந்தநாளில் சிடிபி்யை வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தெரிவித்திருக்கிறார்.

நீங்கள் ஒரு அற்புதம், ஒரு அதியசம். இந்த தலைமுறைக்கும் இனி வரும் தலைமுறைக்கும் நீங்கள் ரோல் மாடலாக இருக்கிறீர்கள். உங்களின் பிறந்தநாளில் நீங்கள் நலமுடன் நீண்ட வாழ வாழ்த்துகிறேன் தலைவா என்று நடிகர் ஹரீஷ் கல்யாண் தெரிவித்திருக்கிறார்.

உங்களுக்கு மைல்கல்லாக அமைந்திருக்கும் பிறந்த நாள் இது. அமைதியையும், ஆரோக்கியமும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று ராதிகா சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.

மிகச்சிறந்த நபர் ரஜினி சாரை வாழ்த்துவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நடிகர் விக்ரம் பிரபுவும், ஹேப்பி பர்த்டே தலைவா என்று நடிகர் பிரச்சன்னாவும் ரொம்ப மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று நடிகர் ஆர்யாவும் தெரிவித்துள்ளனர். ஹேப்பி பர்த்டே தலைவர் என்று நடிகர் சிவகார்த்திகேயனும் தெரிவித்துள்ளனர்.

எங்களின் ஒரே சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சார், கடவுள் உங்கள் பக்கம் இருப்பார் என்று அண்ணாத்த படத்திற்கு இசையமைத்து வரும் டி.இமான் தெரிவித்திருக்கிறார்.

ஒரு 50 ஆண்டுகாலமாக ஒரு கலைகர் இவ்வளவு கவனமாக வெற்றியுடன் பின் தொடர்கிறார். ஆனாலும் எல்லோருடனும் மரியாதை கொண்டிருக்கிறார். உலக சினிமாவில் இது அரிது. அத்தகைய ரத்தினம் எங்கள் தொழில் துறையை சேர்ந்தவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் சார் என்று கவிஞர் விவேக் தெரிவித்திருக்கிறார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் என்று இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்திருக்கிறார். மேலும் நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்ட நடிகர்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் உள்ளிட்ட தயாரிப்பாளர்களும் ரஜினிக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் குழப்பம்

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தினால் தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல்...

5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை- ராதாகிருஷ்ணன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், “சுகாதாரப் பணியாளர்களில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முன்களப் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளவர்கள் தடுப்பூசி...

அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணம்! அவசர கதியில் அரங்கேறிய நாடகம்

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிரடியாக களமிறங்கிய அதிமுக, கடந்த மாதம் 24ஆம் தேதியிலிருந்து விருப்ப மனுக்களை பெற்றது. கடந்த புதன்கிழமையோடு விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 8,240...

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், தொழிலாளி பலி!

விருதுநகர் ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம்...
TopTamilNews