லதா ரஜினியும் குருமூர்த்தியும் திருப்பதியில் எடுத்த முடிவு!

 

லதா ரஜினியும் குருமூர்த்தியும் திருப்பதியில் எடுத்த முடிவு!

அமித்ஷா சென்னை வந்தபோது ரஜினியை சந்திக்க விரும்பியதாகவும் ஆனால் ரஜினி பிடி கொடுக்காததாகவும் தகவல் பரவின. அமித்ஷாவை குருமூர்த்தி சந்தித்து பேசினார். பின்னர் குருமூர்த்தி ரஜினியை சந்தித்து பேசினார். இந்த 2 சந்திப்புகளுமே ஒரு மணி நேரத்தை தாண்டி நீடித்தது. அமித்ஷா கலந்து கொண்ட விழாவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே அ.தி.மு.க. – பா.ஜ.க கூட்டணி தொடரும் என்று பகிரங்கமாக அறிவித்த நிலையில் அமித்ஷா அப்படி எந்த வாக்குறுதியையும் தரவில்லை. அதை வழிமொழியவும் இல்லை. அதனால் அமித்ஷா யாருக்கோ, எதற்காகவோ காத்திருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. அது ரஜினிக்காக தானா? என்ற கேள்வியும் எழுந்தது.

லதா ரஜினியும் குருமூர்த்தியும் திருப்பதியில் எடுத்த முடிவு!

இதுவரை ரஜினி கூடாரத்தில் பார்த்திராத ஒருவர் ரஜினி கட்சி அறிவிப்பு வெளியிடும்போது அருகில் இருக்கிறார். அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி தரப்படுகிறது. இத்தனை நாட்களாக கூடவே இருந்து ரஜினியின் அரசியல் வருகைக்கு காரணமாக இருந்த தமிழருவி மணியனுக்கே மேற்பார்வையாளர் பதவி தான் தரப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியாகும் வரை அர்ஜூனமூர்த்தி பா.ஜ.க.வில் இருந்து விலகவில்லை. திடீரென்று இத்தனையும் நடக்க காரணம் என்ன? குறிப்பாக அத்தனை பத்திரிகையாளர்கள் மத்தியில் அவரிடமே ரஜினி உங்களுக்கு என்ன பதவி சொன்னேன்? என்று கேட்கிறார். ரஜினி இப்படி தடுமாறியதே இல்லை. அறிவித்தது இரண்டே பொறுப்புகள். அதையும் மறப்பாரா?

லதா ரஜினியும் குருமூர்த்தியும் திருப்பதியில் எடுத்த முடிவு!

அதனால்தான் ரஜினி சுயமாக இயங்கவில்லை. யாரோ ஒருவர் இயக்குகிறார். அதனால்தான் தட்டுதடுமாறிக் கொண்டிருக்கிறார் என்ற பேச்சுகள் எழுந்தன. அந்த யாரோ ஒருவரைத்தான் அமித்ஷா என்று சொல்லிவந்தனர். பார்க்கப்போனால் அதுவும் சரியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இன்னொருவரும் இருக்கிறார் என்பது தெரியவருகிறது. அதுதான் கிச்சன் கேபினட் என்கிறார்கள்.

அன்று காலை வரைக்கும் கூட ரஜினி கட்சி அறிவிப்பை வெளியிடும் முடிவில் இல்லை. திடீரென்று டுவிட்டரில் அறிவித்துவிட்டார். எங்களுக்கே தெரியவில்லை என்கிறார்கள் ரஜினி மன்றத்தினர். அடப்போங்கப்பா… அந்த அறிவிப்பு வெளியிடப்போகும் விசயம் முதலில் ரஜினிக்கே தெரியாதாம்.

லதா ரஜினியும் குருமூர்த்தியும் திருப்பதியில் எடுத்த முடிவு!

லதாரஜினிதான் எல்லாத்தையும் தீர்மானிக்கிறாராம். நவம்பர் 30 ம் தேதி மன்றத்தின் நிர்வாகிகளை ரஜினி சந்திக்க வேண்டும், டிசம்பர் 3ம்தேதி கட்சி அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதை எல்லாம் குருமூர்த்தியுடன் இணைந்து லதா ரஜினி எடுத்த முடிவுதானாம். திருப்பதியில் குருமூர்த்தியும் லதா ரஜினியும் சந்தித்து இதுகுறித்த முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவும் உடன் இருந்திருக்கிறார்.

இதுகுறித்த இன்னும் பல தகவல்களை சவுக்கு சங்கர் விரிவாக நமது டாப்தமிழ் நியூஸ் இணையத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். நாளை அப்பேட்டி https://www.toptamilnews.com/இணையத்தில் பதிவேற்றம் ஆகிறது.