சொத்துக்களை எல்லாம் முடக்கியும் கட்சி தொடங்கி கோடிக்கணக்கில் விளம்பரம் செய்யும்மோசடி மன்னன் ஓஜா!

 

சொத்துக்களை எல்லாம் முடக்கியும் கட்சி தொடங்கி கோடிக்கணக்கில் விளம்பரம் செய்யும்மோசடி மன்னன் ஓஜா!

மோசடி மன்னன் ஓஜாவின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டும் கட்சி தொடங்கி கோணக்கில் விளம்பரம் செய்வது எப்படி? என்று கேள்வி எழுந்திருக்கிறது. போதும் போதும் போதும் ஏமாந்தது போதும் என்று ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார் ஓஜா. நியாயமாக பார்த்தால் வங்கிகள்தான் ஓஜாவுக்கு எதிராக இந்த போஸ்டர்களை ஒட்ட வேண்டும் என்ற முணுமுணுப்பும் கேட்கிறது.

கட்சிகளின் பின்னால் தொழிலதிபர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டு வருநிலையில், சொந்தமாகவே ஒரு கட்சியை தொடங்குகிறார் தொழிலதிபர் ஓஜா.

சொத்துக்களை எல்லாம் முடக்கியும் கட்சி தொடங்கி கோடிக்கணக்கில் விளம்பரம் செய்யும்மோசடி மன்னன் ஓஜா!

தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் ரஜினி கட்சி தொடங்குகிறார் என்றால், ஆறிலிருந்து அறுபதுவரைக்கு அவர் தெரிந்த முகம். கட்சி தொடங்கிய உடனேயே 234 தொகுதிகளிலும் போட்டியிட ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வாக்குகளும் அவருக்கு வந்து சேர்ந்துவிடும். ஆனால், தேர்தல் நெருக்கத்தில் ‘மை இந்தியா கட்சி’யை தொடங்குகிறார் தொழிலதிபர் ஓஜா.

அடுத்த ஆண்டுகளில் மை இந்தியா கட்சியின் ஆட்சிதான் என்றும், வரியில்லாத தமிழகமாக மாற்றுவேன் என்று ஓஜா முழங்கி வருவதைப்பார்த்து, அது எப்படி சாத்தியம் என்று கேட்பவர்களிடம், ஊழல் இல்லாத ஆட்சி செய்தால் வரி இல்லாத தமிழகம் சாத்தியம் என்று சொல்லி வருவதைபார்த்து, முதலில் நீ வங்கியில் வாங்கிய கடனை எல்லாம் அடைத்துவிடு. 200 கோடிக்கு மேல் ஆட்டைய போட்ட மோசடி மன்னன் நீ அப்புறமாக வரிவிலக்கு அளிக்கலாம்னு பலரும் பேசுறாங்க.

எஸ்.எல்.ஓ ஸ்டீல்ஸ் லிமிடெட், அரன் ஸ்டீல்ஸ் லிமிடெட், ஸ்ரீ மகாலட்சுமி மெட்டல் , எஸ்.எல்.ஓ. இந்தியா லிமிடெட் என்று ஆறேழு கம்பெனிகள் வைத்திருக்கும் ஓஜா, கார்ப்பரேசன் வங்கியில் 284.66 கோடி ரூபாய் மோசடி செய்ததற்காக அமலாக்கத்துறையினரால் ஓஜாவின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

சொத்துக்களை எல்லாம் முடக்கியும் கட்சி தொடங்கி கோடிக்கணக்கில் விளம்பரம் செய்யும்மோசடி மன்னன் ஓஜா!

தமிழகம், ஆந்திரா, ராஜஸ்தான், ஜெய்ப்பூர் ஆகிய மாநிலங்களில் தமிழகத்தில் திருவொற்றியூர், கீல்பாக்கம், கோடம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, சோலிங்கநல்லூர், பெரியமேடு, பம்மல், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் உள்ள 74 அசையா சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

சொத்துக்கள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்சி தொடங்கி ஊடகங்களில் கோடிக்கணக்கில் எப்படி விளம்பரம் செய்கிறார் ஓஜா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

போதும் போதும் போதும் ஏமாந்தது போதும் என்று ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார் ஓஜா. நியாயமாக பார்த்தால் வங்கிகள்தான் ஓஜாவுக்கு எதிராக இந்த போஸ்டர்களை ஒட்ட வேண்டும் என்கிறார்கள்.