ரஜினியிடம் அமித்ஷா சொன்ன கணக்கு!

 

ரஜினியிடம் அமித்ஷா சொன்ன கணக்கு!

ரஜினியை விடவும் அவரது அண்ணன் சத்தியநாராயணன் ரொம்ப ஸ்பீடாக இருக்கிறார். தம்பி சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூடி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை கோயிலில் ஆயுஷ் யாகம் நடத்தி இருக்கிறார்.

கட்சியின் பெயர், கொடி, பொறுப்பாளர்கள் என்று ரஜினியும் ஆலோசனையில் தீவிரம் காட்டி வரும் நிலையில், அவரது ஆன்மீக அரசியலால் பாஜகவின் பின்னணியில் இயங்கும் ரஜினி என்றே பலரும் சொல்லி வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜக- ரஜினி- அதிமுக மூன்றும் இணைந்து தான் போட்டியிடும் என்ற பேச்சும் இருக்கிறது.

ரஜினியிடம் அமித்ஷா சொன்ன கணக்கு!

ரஜினி கட்சி தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வந்த பாஜக, குறிப்பாக அமித்ஷா, ரஜினி்யிடம் பேசியபோது, கட்சி தொடங்கினால் சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரையிலும் தான் தனித்துதான் போட்டியிடவேண்டும். தமிழகத்தின் தற்போதைய நிலமையின் படி இதைச்செய்தால்தான் சரியாக இருக்கும் என்றும் சொல்லி இருக்கிறாராம் ரஜினி.

ரஜினியிடம் அமித்ஷா சொன்ன கணக்கு!

அதுவும் சரிதான். அப்படியானால் நாம் நாடாளுமன்ற தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறாராம் அமித்ஷா. மேலும், கட்சி தொடங்கவும், தொடர்ந்து நடக்கவும், ஜெயிக்கவும் பாஜகவின் உதவி எப்போதும் இருக்கும் என்றும் உறுதி அளித்திருக்கிறாராம் அமித்ஷா.

பாஜகவைப் பொறுத்தவரையிலும் நாடாளுமன்ற தேர்தல்தான் இலக்கு என்றும், அதற்காகத்தான் ரஜினியை இப்போதே தயார்படுத்தி வருகிறது, தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக அக்கறை செலுத்தி வருகிறது என்றும் சொல்கிறது கமலாலயம் வட்டாரம்.