பேரைச்சொன்னதும் அலறியடித்த ஆ.ராசா! அப்படி என்னதான் பேசினார் ராஜேந்திரபாலாஜி?

 

பேரைச்சொன்னதும் அலறியடித்த ஆ.ராசா! அப்படி என்னதான் பேசினார் ராஜேந்திரபாலாஜி?

அமைச்சரின் பேரைச்சொன்னதும்கே அலறியடித்தார் ஆ.ராசா. இப்படி அலறும்படி அப்படி என்னதான் பேசினார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி?என்ற பரபரப்பு எழுந்தது.

2 ஜி வழக்கில் நீங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விவாதத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உங்களை விவாதத்திற்கு அழைக்கிறாரே… நீங்கள் ஏன் போகவில்லை? என்று கேட்டதும்தான் போதும், அலறியடித்த ஆ.ராசா, ‘’எனக்கு தகுதி இல்லாத ஆளோடு நான் பேசமாட்டேன். தலைவர் ஏற்கனவே அவரை பபூன் என்று சொல்லி இருக்கிறார். அந்த பபூனோடு நான் பேசமாட்டேன்’’என்று கொந்தளித்தார்.

திரும்ப திரும்ப ராஜேந்திரபாலாஜி சொன்னது பற்றி கேட்க, ‘’தகுதி இல்லாதவங்களோட என்னை ஒப்பிடாதீங்க… எனக்கென்று ஒரு தகுதி இருக்குது’’என்றார் ராசா.

மீண்டும் அதே கேள்வியை எழுப்ப முயன்றபோது, ‘’சாரி சார்’’ என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார் ராசா.

பேரைச்சொன்னதும் அலறியடித்த ஆ.ராசா! அப்படி என்னதான் பேசினார் ராஜேந்திரபாலாஜி?

கடந்த சில தினங்களுக்கு முன்பு, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘’ 2ஜியில் அடித்த பணத்தில் திமுகவிடம் 300 கோடிதான் கொடுத்திருக்கிறார் ராசா. மிச்ச பணத்தை கேட்டால், இன்ஸ்கம்டாக்ஸ் பிரச்சனை இருக்குது. அதனால் இப்போதைக்கு எடுக்க முடியாது என்று சொல்லி தட்டிக்கழித்துக்கொண்டே வருகிறார். அதனால்தான் அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்து எங்கேயும் விடாமல் பக்கத்திலேயே வைத்திருக்கிறார் ஸ்டாலின்’’ என்று கூறினார்.

’’காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருகும்போதே காங்கிரஸ் அரசால் கைது செய்யப்பட்டார் ராசா. கருணாநிதியின் மனைவி ராஜாத்திஅம்மாளிடமும் விசாரணை செய்ய வந்தார்கள். அவரால் பேசமுடியவில்லை என்று நாடகமாடுகிறார்கள். கருணாநிதியையும் 2ஜி விவகாரத்தில் காங்கிரஸ் மிரட்டியது. அப்படிப்பட்ட காங்கிரசோடு திமுக கூட்டணியை தொடர வேண்டுமா? கைது செய்து சிறையிலடைத்த கட்சியோடு கூட்டணியா? என்று ஆ.ராசாவுக்கு வெட்கமாக இல்லை. அந்த கட்சியோடு கூட்டணி வேண்டாம் அவராவது ஸ்டாலினிடம் சொல்ல வேண்டாம்.’’ என்று கேட்டவர்,

‘’ பாஜகவிடம் நக்கி பிழைக்கும் கட்சி என்று எங்களை சொல்கிறீர்கள். பாஜகவின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு கொடுக்கிறோம். அதே நேரத்தில் மக்களுக்கு எதிரான திட்டங்கள் என்றால் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஆனால் நீங்கள் அப்படியா? சிறையில் அடைத்தும், மிரட்டியும் காங்கிரஸ் காலை நக்கி பிழைக்கிறீர்கள்’’ என்று கடுமையாக சாடினார்.

ஆ.ராசா குறித்தும், அவர் பதவிக்கு வந்தது குறித்தும், போட்டு வறு வறுன்னு வறுத்தெடுத்திருந்தார் அமைச்சர். அதனால்தான் அவர் பேரைச்சொன்னதும் அலறியடித்தார்.