தற்கொலை எண்ணத்தில் இருப்போரை மீட்கும் ‘சைக்காலஜி’ சித்ரா தற்கொலை செய்வாரா?

 

தற்கொலை எண்ணத்தில் இருப்போரை மீட்கும் ‘சைக்காலஜி’ சித்ரா தற்கொலை செய்வாரா?

சின்னத்திரை நடிகை தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வந்தாலும் அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்றே சொல்லி வருகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

சைக்காலஜி படித்த சித்ரா, தற்கொலை எண்ணத்தில் இருப்போருக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களை தற்கொலை முடிவில் இருந்து மீட்டு வந்திருக்கிறார் என்றும், அப்படிப்பட்டவரா தற்கொலை செய்துகொள்வார் என்று கேட்கிறார்கள் சித்ராவுடன் பழகியவர்கள்.

தூக்கில் தொங்கினார் என்று சொல்வதால், அவர் தூக்கில் தொங்கியதற்கான காயங்கள் எதுவும் கழுத்தில் இல்லை. மாறாக கன்னத்தில் காயங்கள் உள்ளன. இது சித்ராவின் மரணத்தில் மேலும் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

தற்கொலை எண்ணத்தில் இருப்போரை மீட்கும் ‘சைக்காலஜி’ சித்ரா தற்கொலை செய்வாரா?

படப்பிடிப்பு முடிந்து திரும்பி வர இரவு 2 மணி ஆகிவிட்டதால், நசரத் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு சித்ரா தங்கி விட்டதாகவும், சித்ராவுடன் நிச்சயிக்கப்பட்ட ஹேமந்த் ரவி, அடிக்கடி படப்பிடிப்பு தளத்திற்கு வந்து செல்வார் என்றும், அந்த வகையில் நேற்றும் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து சென்றார் என்றும், விடுதியில் சித்ராவுடன் அவரும் தங்கி இருந்ததாகவும் தகவல்.

அதிகாலையில் சித்ரா குளிக்க வேண்டும் என்று ஜேமந்தை வெளியே அனுப்பிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக செய்தி பரவுகிறது.
படப்பிடிப்பு தாமதத்தினால் சித்ரா அந்த விடுதியில் நேற்று இரவு தங்கினார் என்றுசொல்லப்பட்டாலும், அதே விடுதியில்தான் சித்ராவின் குடும்பத்தினரும் தங்கி இருந்தனர் என்றும் கூறப்படுகிறது.

நிச்சயதார்த்ததோடு நிறுத்திவிடலாம் என்று தோன்றுகிறது. ஜேம்ந்துடன் திருமணம் வரை செல்ல விருப்பமில்லை என்றும் உடன் நடித்தவர்களிடம் சொல்லி வந்திருக்கிறார் சித்ரா. அப்படி இருக்கும்போது, சித்ராவை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பதற்காகத்தான் சித்ராவின் குடும்பத்தினரும் அந்த விடுதியில் தங்கி இருந்தனரா என்ற கேள்வி எழுகிறது.

தற்கொலை எண்ணத்தில் இருப்போரை மீட்கும் ‘சைக்காலஜி’ சித்ரா தற்கொலை செய்வாரா?

அதே நேரம் சித்ராவுக்கும் தனக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே பதிவுத்திருமணம் நடந்ததாக ஹேமந்த் போலீசாரிடம் கூறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சித்ராவின் பிரேத பரிசோதனை முடிவுகளும், போலீசாரின் முழுமையான விசாரணை அறிக்கையும் வந்தால் மட்டுமே சித்ராவின் மரணத்தில் சுழன்றடிக்கும் குழம்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று தெரிகிறது.