உண்மையை விளக்கும் படம் எது?

 

உண்மையை விளக்கும் படம் எது?

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 13 நாட்களுக்கு மேல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று நாடு முழுவதும் பாரத் பந்த் நடந்தது. விவசாயிகளும் பல்வேறு கட்சியினரும் இந்த பந்தில் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் பாஜவின் முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு போட்டைவை வெளியிட்டு, ‘உண்மையை விளக்கும் படம்’ என்று பதிவிட்டிருந்தார்.

ராஜா வெளியிட்ட படம்

உண்மையை விளக்கும் படம் எது?

இதைப்பார்த்து கொந்தளித்த பலரும், இதே மாதிரி தான் சல்லிகட்டு போராட்டத்தை கொச்சைபடுத்தினீங்க. மக்களின் போராட்டத்தை பிஜேபி மாதிரி எந்த ஒரு கட்சியும் கேவலப்படுத்துவது இல்லை என்று ராஜாவுக்கு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

உண்மையை விளக்கும் படம் எது?

பயங்கரவாதிகளுக்கு அப்பாவிகளை பார்த்தால் தீவிரவாதிகளாத் தான் தெரியும். ஆம், நாங்கள் தீவிரவாதிகள். பாசிசத்தை எதிர்ப்பதில் தீவிரமாக செயல்படும் தீவிரவாதிகள் என்றும், நீங்க கொண்டு வரும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தால் தேசியவாதிகள் இல்லையேல் தீவிரவாதிகள் என்றும்,

உண்மையை விளக்கும் படம் எது?

இந்த போராட்டம் நடப்பதே இந்தியாவிற்கு வெளியே- பாகிஸ்தானில்தான். பாசிச பாகிஸ்தான் அரசிற்கு எதிராக போராடும் இந்துதுவ சீக்கியர்களின் போராட்டம் வெற்றிபெற இந்தியாவின் சார்பில் ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என அடித்துவிடவேண்டியதுதானே என்றும் ராஜாவுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.

உண்மையை விளக்கும் படம் எது?

மேலும், உண்மையை விளக்கும் படம் இதுதான் என்று பலரும் பல படங்களை பதிவிட்டு ராஜாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.