தனிக்கட்சியா? ரஜினிக்கு ஆதரவா? நெருக்கடியில் விஜய்!

 

தனிக்கட்சியா? ரஜினிக்கு ஆதரவா? நெருக்கடியில் விஜய்!

நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வரித்துறையினர் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றுக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள விஜய் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் ரசிகர்கள், சோதனை முடிந்து மீண்டும் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததும், விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், ஆறுதல் தெரிவிக்கும் விதமகாகவும் ரசிகர்கள் அங்கே திரண்டனர். அப்போது ரசிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட செல்பி படம் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது. பிரதமர் நரேந்திரமோடியின் டுவிட்டுகளை விட அதிகம் ரீ டுவிட்டுகளை பெற்ற பதிவு என்று டுவிட்டர் நிறுவனமே அறிவித்திருக்கிறது.

தனிக்கட்சியா? ரஜினிக்கு ஆதரவா? நெருக்கடியில் விஜய்!

விஜய்யின் இந்த செல்வாக்கு பாஜக கண்ணை உறுத்தியிருக்கிறது.
திமுகவை வீழ்த்துவதற்காக ரஜினியை களம் இறக்குவதற்காக பாஜக முயற்சிகள் எடுத்து வருகிறது என்றும், அந்த களத்தில் விஜய்யையும் இறக்கிவிட்டால் எப்படி? யோசித்திருக்கிறதாம்.

தனிக்கட்சியா? ரஜினிக்கு ஆதரவா? நெருக்கடியில் விஜய்!

ரஜினி கட்சி ஆரம்பித்தபிறகு ரஜினி மக்கள் மன்றத்தினருடன் இணைந்து, விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் தேர்தல் வேலைகளை கவனிக்க வேண்டும். ரஜினிக்கு ஆதரவாக விஜய் பிரச்சாரமும் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால், விஜய் தனிகட்சி தொடங்கி போட்டியிட வேண்டும் என்று விஜய்க்கு பாஜக மேலிடத்தில் இருந்து இந்த ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று தகவல்.

தனிக்கட்சியா? ரஜினிக்கு ஆதரவா? நெருக்கடியில் விஜய்!

இரண்டில் ஒன்றை விஜய் முடிவு செய்தாக வேண்டும். இரண்டையுமே நிராகரித்தால், விஜய்க்கு வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் அமலாக்கத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் விஜய் என்கிறார்கள்.