நாங்க மொத்தமா சேர்ந்து கும்மியடிக்கப்போறது திமுகவைத்தான்… அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலகல

 

நாங்க மொத்தமா சேர்ந்து கும்மியடிக்கப்போறது திமுகவைத்தான்… அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலகல

பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம், பாஜகவின் அழுத்தத்தினால்தான் ரஜினி கட்சி தொடங்கியிருக்கிறாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், ‘’உங்களுக்கு பாஜகவை விட்டா வேறு ஒண்ணும் தெரியாதா?

பாஜக என்ன அமெரிக்காவுல இருக்கா? இல்ல, கலிபோர்னியாவுல இருக்குற சங்கமா? இந்தியாவுல உள்ள அதிகபட்ச மக்கள் ஆதரவோடு ஆட்சியில் இருக்குது. அந்த கட்சியை போய் எதுக்கெடுத்தாலும் இழுக்கிறீங்க. அழுத்தம் கொடுக்குது, தூண்டுவிடுதுன்னு சொல்லுறீங்க. ரஜினிக்கு என்ன சுயசிந்தனை இல்லையா? சுயசிந்தனையோடுதான் அவர் கட்சி தொடங்குவதாக சொல்லி இருக்கிறார். அவர் என்ன முடிவெடுத்தாலும் அதை அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவருகென்று ஒரு கூட்டம் வரத்தான் செய்யும். ஆனா, எப்படி இருந்தாலும் நாங்க மொத்தமா சேர்ந்து கும்மியடிக்கப்போறது திமுகவைத்தான். ஆப்பு அடிச்சு உட்டுருவோம்.’’என்று சொல்லிவிட்டு கலகலவென்று சிரிக்க, உடன் இருந்த ஆதரவாளர்கள் கைதட்டி சிரித்தனர்.

நாங்க மொத்தமா சேர்ந்து கும்மியடிக்கப்போறது திமுகவைத்தான்… அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலகல

அவர் மேலும், ’’நான் 89ல் இருந்து அதிமுகவில் நகர செயலாளராக இருந்தவன். ஆனாலும் ரஜினி படம் எனக்கு பிடிக்கும். அதுமாதிரி அர்ஜுன முர்த்தியும் ரஜினியின் ரசிகரா இருந்திருப்பாரு. ரஜினி கட்சி ஆரம்பிச்சதும் வந்துட்டாரு. உடனே, பாஜகவுல இருந்து தாவிட்டாரு. பாஜகதான் அனுப்பியிருக்குது என்றூ சொல்வதா? பிஜேபி பின்னணி இருக்குதா?ன்னு திமுக கேட்குது. பின்னணி இருந்தா என்ன? முன்னணி இருந்தா என்ன? ஒன் வேலையைப்பாரு. மொத்தத்துல இந்த தேர்தல்ல திமுகவை நாங்க கும்மியடிக்கப்போறோம். நாலாபக்கமும் நின்னு ஓடவிட்டு அடிக்கப்போறோம்.’’என்றதும்,

அப்படீன்னா ரஜினியுடன் அதிமுக கூட்டணியா? என்று கேட்டதும், ‘’அத, முதல்வரும் துணைமுதல்வரும் சேர்ந்து முடிவெடுப்பாங்க’’என்று நழுவினார்.