Home அரசியல் கூமுட்டை.. விளங்காவெட்டி... ஸ்டாலினை குத்திக்கிழத்த அதிமுக

கூமுட்டை.. விளங்காவெட்டி… ஸ்டாலினை குத்திக்கிழத்த அதிமுக

அதிமுகவின் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, திமுக தலைவர் ஸ்டாலினையும், பதிலுக்கு ராஜேந்திரபாலாஜியை ஸ்டாலினும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கூமுட்டை..  விளங்காவெட்டி...  ஸ்டாலினை குத்திக்கிழத்த அதிமுக

இருவரின் வார்த்தைப்போரினால் இரு கட்சியினரும் நடுரோட்டில் மோதிக்கொள்கின்றனர்.

இந்நிலையில், அமைச்சரை பபூன் என்று ஸ்டாலின் விமர்சித்ததற்கு கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு நமது அம்மா.

கூமுட்டை..  விளங்காவெட்டி...  ஸ்டாலினை குத்திக்கிழத்த அதிமுக

விக்கு வைத்த வீக்கே… விளங்காவெட்டி கூப்பே… என்ற தலைப்பில், பால்வளத்துறை அமைச்சரை பபூன் என்று விமர்சித்திருக்கிறாரே திருவாளர் துண்டுச்சீட்டு என்று கேட்டு, ‘’இதோ பார்ரா.. சுடலை என்று தட்டச்சு செய்தாலே கூகுளில் இருந்து இவரது கோமாளித்தனங்கள் குறித்தான மீம்ஸ்கள் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது’’ என்று சொல்லிவிட்டு,

மீம்சுகளின் மாம்சே, கண்டெண்ட்களின் கடவுளே, சுதந்திர தினமும் குடியரசு தினமும் அறியாத கூமுட்டையே என்றும், யானை வரும் முன்பே மணியோசை வரும் பின்னே, பூனை மேல மதில் மேல் என்று பலமொழிகளை கொலை செய்யும் பைத்தியமே என்றும்,

கூமுட்டை..  விளங்காவெட்டி...  ஸ்டாலினை குத்திக்கிழத்த அதிமுக

அனிதாவுக்கு சரிதா, கொள் நெல் லொள் என்றெல்லாம் மக்களை சிரிக்க வைத்திருக்க, அமைச்சரைப்பார்த்து பபூன் என்று சொல்லும் துண்டுச்சீட்டே உனக்கு வெட்கமாக இல்லையா? துண்டு சீட்டு துணைக்கு வைத்துக்கொள்ளாமல் ஒரு நிமிடம் உளராமல் பேசமுடியுமா?

விக்கு வைத்த வீக்கே விளங்காவெட்டி கூப்பே..நீதான்பபூன். உனக்கு போட்டியாக புறப்பட்டிருக்கும் உன் மகன் இன்னொரு கோமாளி. இப்படி ஊர் சிரிக்கும் கேலிப்பொருளாக இருந்து, பிறரை கேலி செய்யலாம? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

ஸ்டாலின் பற்றி அடிக்கடி நமது அம்மாவில் வறுத்தெடுத்து வந்தாலும் இந்த அளவுக்கு இதுவரையிலும் குத்திக்கிழிக்கவில்லை என்றே தெரிகிறது.

கூமுட்டை..  விளங்காவெட்டி...  ஸ்டாலினை குத்திக்கிழத்த அதிமுக
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

2 முக்கிய விக்கெட்டுகள்… திணறும் இந்தியா… பதறும் ரசிகர்கள் – மழையால் மீண்டும் சோதனை!

சமீப ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் மீதான மக்களின் ஆர்வம் குறைந்துகொண்டே போவதால், டெஸ்ட் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இந்தத் தொடர் 2019ஆம்...

ஜூன் 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய சூர்யா வேண்டுகோள்! ஒரே தேர்வு முறைக்கு முடிவுகட்ட அழைப்பு

அரசுப்பள்ளியில் படித்து உயர் கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ’கல்வியே ஆயுதம்’. ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் பணம் படைத்தவர்கள் ஒரு விதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற...

“இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்… 5ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்” – அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்துகொண்டார்.

’’இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல்’’

தனக்கென்று வாழாத தலைவன், ஏழை எளிய மக்களின் தலைமகன். தனக்கும், தனது குடும்பத்திற்கும் எதிராக பரப்பப்படும் வெறுப்பை, கேலிகளை, பொய்களை புன்னகையால் எதிர்கொள்ளும் பண்பாளன் அன்பும்,எளிமையும்,நேர்மையும் அவர் அடையாளம். இந்த...
- Advertisment -
TopTamilNews