ஆதிக்கஜாதி பெருமை… கமலின் நுட்பமான குறியீடு!

 

ஆதிக்கஜாதி பெருமை… கமலின் நுட்பமான குறியீடு!

தன்னை சங்கி என்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருவதை கண்டு வெகுண்டெழுந்த கமல்ஹாசன், அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை என்று ஆத்திரத்துடன் கூறினார்.

தான் சங்கி அல்ல என்று கமல்ஹாசன் சொன்ன பிற்கும் அவரை சங்கி என்றே கமெண்ட் செய்து வருகிறார்கள். எனக்கு ஜாதி பின்னணி கிடையாது என்கிற கமல், ஜாதீய அடையாளத்தோடுதான் அலைகிறார் என்றும், அதற்கு காரணமாகவும் சிலவற்றை சொல்லி வருகின்றனர்.

ஆதிக்கஜாதி பெருமை… கமலின் நுட்பமான குறியீடு!

கமல்ஹாசனுக்கு தற்போது தலைமுடி முழுவதுமாக நரைத்துவிட்டாலும், கருப்பு டை அடித்துக்கொண்டவர், நடுவில் மட்டும் வெள்ளையாக ஒரு கோடு எடுத்திருப்பதால், அதை குறியீடு என்றே பலரும் சொல்லி வருகிறார்கள்.

அந்த குறியீட்டை கமல் இப்போது கொண்டுவரவில்லை. அவர் பிறந்தது முதலே அவரது எண்ணத்தில் இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பே அவர் நடித்த ‘இந்திரன் சந்திரன்’ படத்திலும் அந்த குறியீட்டி கொண்டுவந்திருப்பார் என்று தேடிப்பிடித்து கமலின் குறியீடுகளை அடுக்குகிறார்கள்.

ஆதிக்கஜாதி பெருமை… கமலின் நுட்பமான குறியீடு!

அதுமட்டுமல்ல, ‘அன்பே சிவம்’ படத்தில், திருவள்ளுவரை யார் என்றே தெரியாத மாதவனிடம் கமல்,
‘மயிலப்பூர் Man. Near Sanskrit College Setting..’ என்பார். –
‘மயிலப்பூர்’ – ‘Sanskrit’ எவ்வளவு நுட்பமான குறியீடு. வசனம் மதன்.
8 December 2014 அன்று எழுதியது.

  • என்றும் குறிப்பிட்டிருக்கிறார் எழுத்தாளர் வே.மதிமாறன்.
ஆதிக்கஜாதி பெருமை… கமலின் நுட்பமான குறியீடு!

வைணவ பெருமையைத் தமிழ் சினிமாவில் தீவிரமாகக் காட்டியவர் கமல் என்றும் சொல்லும் மதிமாறன், கமல் இயக்கத்தில் வெளியான ஹேராமில் அய்யங்கார் குடும்பப் பின்னணியில், வைணவக் கலாச்சாரத்தை ஒவ்வொரு ஷாட்டிலும், உச்சரிப்பிலும் சிலாகித்திருப்பார். காந்தியையும் வைணவராகதான் பார்த்திருப்பார் என்கிறார்.

ஆதிக்கஜாதி பெருமை… கமலின் நுட்பமான குறியீடு!

மத நல்லிணக்கத்தை வலியுறுத்த, ரகுபதி ராகவ ராஜாராம் என்று காந்தி பாடிய பாடலில், ராமனுக்கு முக்கியத்துவம் கொடுத்து. பிறகு ஈஸ்வர, அல்லா என்று தான் வரிசைப்படுத்தியிருப்பார். ஆனால், கமல்ஹாசன் தனது ஹேராம் படத்தில் அந்தப் பாடலை டைட்டில் சாங்கின் துவக்க வரியாக மட்டும் வைத்துக்கொண்டு, வைணவப் பெருமையான காந்திக்கு பிடித்த, 15 நூற்றாண்டில் நரசிம்மேத்தா என்ற குஜராத்தியால் எழுதப்பட்ட வைஷ்ணவ ஜன தோ பாடலைதான் பின்னணியாக வைத்திருப்பார்.

ஆதிக்கஜாதி பெருமை… கமலின் நுட்பமான குறியீடு!

எம்.எஸ். சுப்புலட்சுமி, லதாமங்கேஷ்கர் என்று பலரும் இந்தப்பாடலை பாடி புகழ் பெற்றிருந்தபோதும் கூட, அவர்கள் வைணவர்கள் அல்ல என்பதால்தான் ’பட்டம்மாள்’ என்ற அய்யங்கார் சமூகத்தைச் சேர்ந்தவரைதான் பாட வைத்திருப்பார் கமல் என்கிறார். மேலும், அந்தப் படத்தின் இசையமைப்பாளராக இளையராஜாவிற்கு முன் வேலை செய்த எல். சுப்பிரமணியத்திற்கும் கமலுக்குமான சண்டை, சைவ, வைணவ சண்டையாகதான் இருந்திருக்க வேண்டும் என்கிறார் அழுத்தமாக.

ஆதிக்கஜாதி பெருமை… கமலின் நுட்பமான குறியீடு!

விருமாண்டி படத்திலும், நெப்போலியன் பாத்திரமும் அவரின் உறவினர்களும் மனிதாபிமானகளாக காட்டியிருப்பார். அவர்கள் நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த வைணவர்கள். தேவர் சமூகத்தினர் எப்போதும் விபூதிதான் இட்டுக்கொள்வார்கள். அதனால் தேவர் சமூகத்திற்கும், நெப்போலியன் கதாபாத்திரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை காட்டியிருப்பார். கமலின் இந்த வைணவப் பெருமை அய்யங்கார்களின் ஆதிக்கஜாதி பெருமையாகதான் பதிவாகிறது என்கிறார் உறுதியுடன்.