ம…ர் நட்டதற்காக விவசாயி ஆக முடியாது.. ஸ்டாலின் மீது அதிமுக, பாஜவினர் கடும் தாக்கு

 

ம…ர் நட்டதற்காக விவசாயி ஆக முடியாது.. ஸ்டாலின் மீது அதிமுக, பாஜவினர் கடும் தாக்கு

பச்சை துண்டு போட்டுக்கிட்டா விவசாயி ஆகிவிடமுடியுமா? என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கேட்டு வருகிறார் திமுக தலைவர் மு.க.,ஸ்டாலின். மேலும், தானும் ஒரு விவசாயி என்றும், விவசாயிகளின் நண்பன் என்றும் சொல்லி வரும் எடப்பாடி பழனிச்சாமியை, விவசாயிகளின் எதிரி என்றும் விமர்சித்து வருகிறார் ஸ்டாலின்.

ம…ர் நட்டதற்காக விவசாயி ஆக முடியாது.. ஸ்டாலின் மீது அதிமுக, பாஜவினர் கடும் தாக்கு

இந்நிலையில் வேளாண் புதிய திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராடத்திற்கு, திமுகவும், திமுக கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின். கடந்த 2016ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் இருந்ததைத்தான் பாஜக திட்டங்களாக கொண்டு வந்திருக்கிறது. அப்புறம் ஏன் எதிர்க்கிறது என்ற கேள்வியை எழுப்பி, அவருக்கு எதிராகவும், அதே நேரம் முதல்வரை விமர்சித்து வருவதற்கு எதிராகவும், அதிமுகவினரும் பாஜகவினரும் ஸ்டாலினை கடுமையாக தாக்கி வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அண்மைக் காலங்களாக ஸ்டாலின் டோப்பா வைத்திருப்பதாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த டோப்பா விவகாரத்தையும், விவசாய விவகாரத்தையும் இணைத்து அவரை கலாய்த்து டுவிட்டரில் அதை ஷேர் செய்து டிரெண்டாக்கி வருகிறார்கள்.

அதிமுக, பாஜக அல்லாத பொதுவானவர்களும் இந்த கமெண்ட்டை ஷேர் செய்து வருகிறார்கள்.