போலீஸ் தடியடியில் பாஜக பிரமுகர் பலி: மம்தாவை கண்டித்து பந்த்

 

போலீஸ் தடியடியில் பாஜக பிரமுகர் பலி: மம்தாவை கண்டித்து பந்த்

மம்தா பானர்ஜியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது என்றும், வடக்கு வங்காள மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் கூறி பாஜக தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. இன்னும் 5 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில் பாஜக முன்னெடுத்திருக்கும் இந்த பிரச்சாரத்தினல் மேற்கு வங்கத்தில் பரபரப்பு நிலவுகிறது.

இந்நிலையில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும், ஆட்சியையும் கண்டித்து பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா சார்பில் உத்தர்கன்யா அபிஜனின் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தை ஒடுக்கியது.

போலீஸ் தடியடியில் பாஜக பிரமுகர் பலி: மம்தாவை கண்டித்து பந்த்

இந்த தாக்குதலில் பாஜக இளைஞரணி தேசிய தலைவரும் பெங்களூரு மக்களவை உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா, மாநில பாஜக இளைஞரணி தலைவர் சௌமித்ரா கான், பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பலரும் போலீசார் கண்ணீர் புகை வீச்சில் கடுமையாக பாதிகப்பட்டுள்ளனர் என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் தடியடியில் பாஜக பிரமுகர் பலி: மம்தாவை கண்டித்து பந்த்

போலீசாரின் தடியடியில் படுகாயமடைந்த பாஜக தொண்டர் யூலன் ராய்(50) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் தெரிவித்துள்ளது பாஜக.

ஜல்பைகுரியன் கஜோல்டோபாவை சேர்ந்த யூலன் ராய் பலியானதை கண்டித்தும், சுவாமி விவேகானந்தர், பாங்கிம் சந்திரா, நேதாஜி மற்றும் எண்ணற்ற தேசபக்தர்களின் வாழ்ந்த மண்ணில் போலீசின் அராஜகத்தை கண்டித்தும் இன்று மேற்கு வங்கத்தில் பந்த் போராட்டத்தை அறிவித்திருக்கிறார் தேஜஸ்வி சூர்யா