தாலிகட்டும் நேரத்தில் வந்த பாஸிட்டிவ் ரிசல்ட்: கொரோனா மையத்திலேயே திருமணம்

தாலிகட்டும் நேரத்தில் வந்த பாஸிட்டிவ் ரிசல்ட்: கொரோனா மையத்திலேயே திருமணம்

ராஜஸ்தானில் ஷாபாத் நகரில் கொரோனா சிகிச்சை மையத்தில் நடந்திருக்கிறது ஒரு திருமணம். மணமக்கள் இருவரும் பாதுகாப்பு உடைகளுடன் திருமணம் செய்துகொண்டனர்.

தாலிகட்டும் நேரத்தில் வந்த பாஸிட்டிவ் ரிசல்ட்: கொரோனா மையத்திலேயே திருமணம்

திருமணத்திற்கு பிறகு மணமகளும், அவருடைய தாயாரும் கொரோனா மையத்திலேயெ தங்கிவிட்டனர். மணமகன்மட்டும் வீட்டிற்கு சென்றார்.
திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, மணப்பெண்ணின் அத்தை மற்றும் மாமாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினர். அவர்களுடன் தொடர்பில் இருந்ததால் மணப்பெண் குடும்பத்தினருக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டது.

தாலிகட்டும் நேரத்தில் வந்த பாஸிட்டிவ் ரிசல்ட்: கொரோனா மையத்திலேயே திருமணம்

இந்த டெஸ்ட்டின் முடிவுகளில் மணப்பெண்ணுக்கும், அவரது தாயாருக்கும் தொற்று இருப்பது உறுதியானதால், சுகாதாரத்துறை அலுவலர்கள் அவ்விருவரையும் மருத்துவமனை அழைத்துச்செல்ல வந்தனர். ஆனால், அவர்கள் மணமேடையில் இருந்தனர்.

திருமணம் நின்றுவிட்டால் மீண்டும் நடைபெறாது என்று உறவினர்கள் கெஞ்சி கேட்டுக்கொண்டதால், மனிதாபிமான அடிப்படையில், கொரோனா சிகிச்சை மையத்தின் காலி இடத்தில் தற்காலிக பந்தல் அமைத்து அந்த திருமணத்தை முடித்து வைத்தனர் சுகாதாரத்துறை அலுவலர்கள்.