திருமாவுக்கு முருகன் கொடுத்த பதிலடி!

 

திருமாவுக்கு முருகன் கொடுத்த பதிலடி!

காஞ்சிபுரத்தில் பேசிய திருமாவளவனுக்கு கன்னியாகுமரியில் பதிலடி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் எல்.முருகன்!

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறித்தது முதல் விடுதலை சிறுத்தைகள் கட்சி்யினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சி்யின் தலைவரிடம் அதுகுறித்து கேட்டபோது, ‘’உடல்நிலை சரியில்லை என்று கூறியவர் திடீரென்று கட்சி ஆரம்பித்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் அச்சுறுத்தல் காரணமாகவே அவர் கட்சிதொடங்கி இருக்கிறார். பாஜகவின் மற்றொரு முகம்தான் ரஜினிகாந்த்’’ என்று தெரிவித்தார்.

திருமாவுக்கு முருகன் கொடுத்த பதிலடி!

அம்பேத்கரின் நினைவு தினமான நேற்று கன்னியாகுமரியில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக தமிழக தலைவர் எல்.முருகனிடம், திருமாவளவன் சொன்னது குறித்து கேட்டபோது, ‘’வெயிட் பண்ணுங்க…’’என்றார். மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் அதே கேள்வியை எழுப்பியபோது, ‘’ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கட்டும்..பொறுத்திருந்து பாருங்க…’’என்றவரிடம், மீண்டும் திருமாவளவன் சொன்னது குறித்து கேள்வி எழுப்ப, ‘’வெயிட் பண்ணுங்க… வெயிட் பண்ணுங்க..’’ என்றார் முருகன்.