குமரியில் நிகழ்ந்த அதிசயம்!

 

குமரியில் நிகழ்ந்த அதிசயம்!

ஜெர்சி இன பசு ஒன்று நிகழ்த்திய அதிசயத்தால் கன்னியாகுமரி மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இருக்கும் இறச்சகுளத்தில் கால்நடை மருத்துவர் சுதாகர், கால்நடை பண்ணை ஒன்றை அமைத்திருக்கிறார்.

குதிரை, நாய், கோழிகளுடன் விலை உயர்ந்த பசுக்களையும் வளர்த்து வருகிறார்.

குமரியில் நிகழ்ந்த அதிசயம்!

இப்பண்ணையில் உள்ள ஜெர்சி இன பசு முதல் நாளில் ஒரு குட்டியை ஈன்றது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதை பார்த்த சுதாகர், வழக்கம்போல தனது பணிகளை செய்துவந்தார். ஆனால் அவர் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் மறுநாளும் ஒரு குட்டியை ஈன்றது அப்பசு.

இந்த அதியசத்தால் சுதாகர் ஆச்சரியத்தில் மூழ்கினார்.

பொதுவாக ஒரு குட்டியை ஈன்ற பிறகு, இன்னொரு குட்டி வயிற்றுக்குள் இருந்தால் 2 மணி நேரத்தில் அது இறந்துவிடும். ஆனால், 24 மணி நேரத்திற்கு பின்னர் இன்னொரு குட்டியை ஈன்று அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறது அந்த ஜெர்சி பசு.

தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார் சுதாகர். இந்த தகவல் பரவி குமரி மக்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறது.