யாரும் வரவேண்டாம்… ரஜினிகாந்த் வேண்டுகோள்

 

யாரும் வரவேண்டாம்… ரஜினிகாந்த் வேண்டுகோள்

வருடம் முழுவதும் சென்னையில் இருந்தாலும் பிறந்தாளில் வெளியூர் சென்றுவிடுவது ரஜினிகாந்தின் வழக்கம். சில பிறந்தநாள் மட்டும் விதிவிலக்கு.

நான் ஊரில் இருந்தால் என் பிறந்தநாளுக்காக வெளியூரில் இருந்தெல்லாம் ரசிகர்கள் வருவீர்கள். உங்களுக்குத்தான் செலவாகும். கூட்டம் ஜாஸ்தியான தேவையில்லாத பிரச்சனைகள் வரும். அதனால் என் பிறந்த நாளைக்கு நான் ஊரில் இல்லை. யாரும் வரவேண்டாம் என்று வழக்கமாக வேண்டுகோள் விடுக்கும் ரஜினிகாந்த் இப்போதும் தனது மன்றத்தின் நிர்வாகிகள் மூலமாக தெரிவித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

யாரும் வரவேண்டாம்… ரஜினிகாந்த் வேண்டுகோள்

வழக்கமான பிறந்த தினம் போல் இல்லை இந்த பிறந்த தினம். கட்சி தொடங்கப்போவதால் இந்த பிறந்தநாளை விஷேசமாக கொண்டாடவேண்டும் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.

ரஜினியை பொறுத்தவரைக்கும், கட்சி தொடங்குவதற்கு எனக்கு ஒரு கடமை இருக்குது. அண்ணாத்த படத்தை முடித்துக்கொடுக்க வேண்டிய கடமை இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். அந்த கடமையை நிறைவேற்று வதற்காகத்தான் அவர் ஐதராபாத் செல்கிறார். அப்படியே, அண்ணன் வீட்டில் பிறந்தநாளை சிம்ப்பிளாக கொண்டாட முடிவெடுத்திருகிறார்.

அதே நேரம், தன் பிறந்தநாளுக்கு வந்து வாழ்த்துவதைவிட, கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்ப்பதிலும், இதுவரை 70 சதவிகித பூத் கமிட்டி வேலைகளை முடித்திருக்கும் ரசிகர்கள் 100 சதவிகித பூத் கமிட்டி வேலைகளை முடிப்பதுதான் அவர்களுக்கான கடமை. அதனால், காலத்தை விரயம் செய்யாமல் அதை செய்தால் போதும் என்று நிர்வாகிகளிடம் சொல்லி இருக்கிறார் ரஜினி.