ஹலோ செயலி மூலம் நட்பு: ராணுவ வீரரின் தொல்லையால் இளம்பெண் தற்கொலை

 

ஹலோ செயலி மூலம் நட்பு: ராணுவ வீரரின் தொல்லையால் இளம்பெண் தற்கொலை

ஹலோ ஆப் மூலமாக ஏற்பட்ட நட்பை பயன்படுத்திக்கொண்டு திருமணம் செய்துகொள்ளச்சொல்லி ராணுவ வீரர் கொடுத்த தொல்லையினால் சென்னை இளபெண் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியளிக்கிறது.

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தை முத்துகுமரேசன்(வயது32) ராணுவத்தில் சிப்பாயாக உள்ளார். திருமணமானவர் என்றாலும் ஹலோ ஆப் மூலமாக பெண்களை வளைக்க முயன்று வந்தததில், சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பாரதி( வயது ) என்ற இளம்பெண் சிக்கியிருக்கிறார். அவருடன் தொடர்ந்து ஹலோ ஆப் மூலமாக பேசி வந்த பாரதி, ஒரு கட்டத்தில் முத்துகுமரேசன் விரித்த காதல் வலையில் விழுந்துவிட்டார்.

ஹலோ செயலி மூலம் நட்பு: ராணுவ வீரரின் தொல்லையால் இளம்பெண் தற்கொலை

போனில் அதிகம் நேரம் பேசி இருவரும் நெருக்கம் ஆனதால், நேரிலும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போதுதான் முத்துகுமரேசனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரியவந்திருக்கிறது.

இதனால் முத்துகுமரேசனுடன் உள்ள தொடர்பை துண்டித்துக்கொண்டார் பாரதி. இதனால் ஆத்திரம் கொண்ட முத்துகுமரேசன், பாரதியுடன் எடுத்துகொண்ட புகைப்படங்களை வைத்து மிரட்டி வந்திருக்கிறார். திருமணம் செய்துகொள்ள மறுத்தால் குடும்பத்தினரை கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த பாரதி, கடந்த 2ம் தேதி அன்று பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

பாரதியின் செல்போனை ஆய்வு செய்த பள்ளிக்கரணை போலீசார், அதில் பாரதி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு பேசிய வீடியோ காலினை எடுத்து ஆய்வு செய்துள்ளனர். அதில்தான் முத்துகுமரேசன் சிக்கியுள்ளார்.