பார்த்திபன் அடித்த கமெண்ட் – ரஜினி ரசிகர்களின் பதிலடி

 

பார்த்திபன் அடித்த கமெண்ட் – ரஜினி ரசிகர்களின் பதிலடி

அரசியல் கட்சி தொடங்கப்போவதாக முடிவெடுத்திருக்கும் ரஜினிகாந்த், அதுகுறித்த அறிவிப்பை வரும் டிசம்பர் மாதம் 31ம்தேதி அறிப்பதாக தெரிவித்திருக்கிறார். இம்மாதக்கடைசியில் அவர் அறிவிப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில்,

’’புதிய காட்சிகள் துவங்கும் காலை நேரம்….. (கட்சி எனத் தவறி வாசித்தால் … அது மாத கடைசி)’’ என்று இயக்குநர் பார்த்திபன் டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.

பார்த்திபன் அடித்த கமெண்ட் – ரஜினி ரசிகர்களின் பதிலடி

பார்த்திபனின் இந்த கமெண்டுக்கு, நானும் முதலில் கட்சி என்றுதான் படித்தேன். அப்புறம் நீங்கள் சொல்லி இருப்பதை பார்த்துவிட்டுத்தான் காட்சி என்று படித்தேன் என்று பலரும், உங்களுக்கு ரொம்ப குசும்பு அதிகம் சார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

பார்த்திபன் அடித்த கமெண்ட் – ரஜினி ரசிகர்களின் பதிலடி

மாத கடைசி..அது தமிழ் நாட்டின் அவலத்தை போக்கும் கடைசியாக (கட்சியாக) இருக்கும். அரை நூற்றாண்டு அடிமைத்தனம் விலகும் இந்த மாத கடைசியிலே.
ஊரை அடித்து உலையில் போட்ட கயவர்களின் தேதி குறித்த மாத கடைசி. தை பிறந்தால் தமிழகத்திற்கு வழி பிறக்கும் தமிழனே இதுவே உனக்கு கிடைத்த கடைசி மாத கடைசி என்று ரஜினி ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.