மதுரையில் 18 தெருக்களை அடைத்ததால் பரபரப்பு

 

மதுரையில் 18 தெருக்களை அடைத்ததால் பரபரப்பு

மதுரையில் 18 தெருக்களை தகரம் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் அடைத்துவிட்டதால் மாநகரம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரையில் 18 தெருக்களை அடைத்ததால் பரபரப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. ஒரே நாளில் 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா முதல் அலையின் தாக்கத்தை விடவும் 2வது அலையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் ஒரேநாளில் 3986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மதுரையில் 18 தெருக்களை அடைத்ததால் பரபரப்பு

சென்னை மாநகராட்சியில் நேற்று ஒருநாளில் மட்டும் 1459 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் நோய் தொற்றினை கட்டுப்படுத்த மீண்டும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சி. சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சென்னையை போலவே மதுரையிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்தில் 592 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருந்தால் அந்த தெருவினை தகரம் கோண்டு அடைத்துவிடுகின்றனர். அப்படி மதுரையில் இதுவரைக்கும் 18 தெருக்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மாநகரம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.