இந்தியாவை மிரட்டும் 18 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் – மத்திய அரசு பட்டியல்

 

இந்தியாவை மிரட்டும் 18 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் – மத்திய அரசு பட்டியல்

இந்தியாவை சீர்குலைக்கும் நோக்கோடு உலகில் பல தீவிரவாதிகள் தொடர்ந்து பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்பட்டு வருகின்றனர். இவர்களில் 18 பேர் மிக முக்கியமானவர்கள் என்று மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் அவர்களின் பெயர்கள் சட்டத்தின் நான்காவது பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து அந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது

இந்தியாவை மிரட்டும் 18 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் – மத்திய அரசு பட்டியல்


பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் பின்வருமாறு:

  1. சஜித் மிர் என்கிற சஜித் மஜித் என்கிற இப்ராகிம் ஷா – இவர் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பாவின் தளபதி ஆவார். மும்பை தாக்குதலை திட்டமிட்டவர்களில் நபர்களில் இவரும் ஒருவர்
  2. யூசுப் முசம்மில் என்கிற அகமது பாய் என்கிற யூசுப் முசமில் – லஷ்கர் இ தொய்பாவின் ஜம்மு-காஷ்மீர் பகுதி தளபதி இவருக்கும் மும்பை தாக்குதலுக்கும் தொடர்பு உண்டு.
  3. அப்துர் ரெஹ்மான் மக்கி என்கிற அப்துல் ரெஹ்மான் மக்கி – இவர் லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபிஸ் சயீத்தின் மைத்துனர் ஆவார். லஷ்கர் இ தொய்பா அரசியல் விவகாரங்கள் தலைவர் மற்றும் லஷ்கர் இ தொய்பா வெளிநாட்டு உறவுகள் தலைவராக செயல்பட்டவர்
  4. சாகித் மெகமூத் என்கிற சாகித் மெகமூத் ரெஹ்மதுல்லா பாகிஸ்தானில் உள்ள பலாஹ்-இ-இன் சனியத் அமைப்பின் துணைத் தலைவர்.
  5. பர்ஹதுல்லா கோரி என்கிற அபு சுபியான் என்கிற சர்தார் சாகாப் – ஹைதரபாத் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி
  6. அப்துல் ரவுப் அஸ்கர் என்கிற முப்தி அஸ்கர் –பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சிகள் கொடுப்பவர் இவர்தான். 2001-இல் பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் திட்டமிட்டவர்களில் முக்கிய நபர் இவர்.
  7. இப்ராகிம் அத்தர் என்கிற அகமது அலி முகமது அலி ஷேக் 1999-ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தலில் தொடர்புடையவர்
    .
  8. யுசுப் அசார் என்கிற அசார் யூசுப் என்கிற முகமது சலிம் இவரும் 1999-ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தலில் தொடர்புடையவர்
  9. சாகித் லதிப் என்கிற சோட்டா சாகித் பாய் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷே முகமதின் சியால்கோட் தளபதி
  10. சையது முகமது யூசுப் ஷா என்கிற சையத் சலாவுதீன் – ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைமை தளபதி
  11. குலாம் நபி கான் என்கிற அமிர் கான் என்கிற சைபுல்லா காலித் – ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் துணைத் தலைமை தளபதி
  12. ஜாபர் ஹுசைன் பட் என்கிற குர்ஷித் என்கிற முகமது ஜாபர் கான் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் துணைத் தலைமை தளபதி
  13. ரியாஸ் இஸ்மாயில் ஷாபந்திரி என்கிற ஷா ரியாஸ் அகமது என்கிற அஜீஸ் -இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் நிறுவனர்.
  14. முகமது இக்பால் என்கிற ஷபாந்திரி முகமது இக்பால் – இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் இணை நிறுவனர். )
  15. ஷேக் ஷகீல் என்கிற சோட்டா ஷகீல் – தாவூத் இப்ரகாம் கூட்டாளி
  16. முகமது அனிஸ் ஷேக் (1993 மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி)
  17. இப்ராகிம் மேமன் என்கிற டைகர் மேமன் – மும்பை குண்டு வெடிப்புக்கு திட்டம் தீட்டியவர்.
  18. ஜாவேத் சிக்னா என்கிற ஜாவேத் தாவூத் டெய்லர் – 1993 மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர், தாவூத் இப்ராகிம் கூட்டாளி.

சுபாஷ் சந்திரபோஸ்