அரசியலில் இதெல்லாம் சாதாரணம்… நமது டாப் தமிழ் நியூஸ் இணையத்தில் வந்த செய்திக்கு தமிழருவி மணியன் விளக்கம்

 

அரசியலில் இதெல்லாம்  சாதாரணம்… நமது டாப் தமிழ் நியூஸ் இணையத்தில் வந்த செய்திக்கு தமிழருவி மணியன் விளக்கம்

ரஜினிக்கு எதிராக குரல் கொடுத்து வந்த தமிழருவி மணியன் தற்போது ரஜினி கட்சிக்கு மேற்பார்வையாளராக இருக்கும் சூழலில், ரஜினியை பற்றி தமிழருவி மணியன் முன்னர் விமர்சித்திருந்ததை டாப் தமிழ் நியூஸ் இணையத்தில் நேற்று பதிவிட்டிருந்தோம். போயஸ்கார்டனில் ரஜினி வீட்டு முன்பாக இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ராஜாஜியை பற்றிஅண்ணா சொல்லாத விமர்சனமா? கருணாநிதி முன்வைக்காத விமர்சனமா? பின்னாளில் இணைந்தபிறகு முன்னர் பேசியவற்றை எல்லாம் எடுத்து போடுவது அரசியலில் வழக்கம்தான்.

ரஜினியை பற்றிய புரிதல் இல்லாதபோது நான் அப்படி சொன்னேன். அவரைப்பற்றி புரிதல் வந்தபோது நான் அப்படி பேசுவதை நிறுத்திக்கொண்டேன்.

அரசியலில் இதெல்லாம்  சாதாரணம்… நமது டாப் தமிழ் நியூஸ் இணையத்தில் வந்த செய்திக்கு தமிழருவி மணியன் விளக்கம்

ரஜினியை பற்றி மட்டுமல்ல, எல்லா நடிகர்களை பற்றியும் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறேன். ரஜினியை ஒரு நடிகர் என்ற கோணத்தில் மட்டுமே நான் பார்த்துவந்தபோது, அவரைப்பற்றி விமர்சித்தேன். அவரிடம் பழகியபோதுதான், அவர் எந்த அளவுக்கு எளிமையான, இனிமையான மனிதர் என்பதை புரிந்துகொண்டேன். இப்படி ஒரு பற்றற்ற பக்குவம் உள்ள மனிதரை பார்த்த அன்றிலிருந்து அவர் மீதான அபிப்ராயங்களை மாற்றிக்கொண்டேன்.

அரசியல் கட்சி தொடங்குவது சம்பந்தமாக ரஜினியை நான் முதன் முதலில் சந்தித்தபோதே, திருப்பூரில் ஒரு கூட்டத்தில் நான் ரஜினியைப் பற்றி கடுமையாக விமர்சித்து பேசிய சிடியை ரஜினியிடம் நானே கொடுத்தேன். அந்த சிடியை கொடுத்துவிட்டு, இந்த அளவுக்கு உங்களைப்பற்றி கடுமையாக பேசியிருக்கிறேன். ஆனால், உங்களை பற்றி அறிந்துகொண்டபிறகு இனி அப்படி பேசமாட்டேன் என்று அவரிடமே வெளிப்படையாக சொல்லிவிட்டேன் என்றார் தமிழருவி மணியன்.

நமது டாப் தமிழ் நியூஸ் இணையத்தில் நேற்று பதிவிடப்பட்ட செய்தி – தமிழருவிக்கு வந்த புது தலைவலி..