ஜெ., மரணத்தில் உள்ள மர்மங்கள்… வாழப்பாடி ராமசுகந்தன் ஏற்படுத்தும் பரபரப்பு

 

ஜெ., மரணத்தில் உள்ள மர்மங்கள்…  வாழப்பாடி ராமசுகந்தன் ஏற்படுத்தும் பரபரப்பு

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை அதிமுக, பாஜக அல்லாத ஆட்சி வந்தால் மட்டுமே வெளியே வரும் என்று தெரிவித்திருக்கிறார்
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனும், தேசிய காங்கிரஸ் கட்சி செயலாளருமான வாழப்பாடி ராமசுகந்தன்.

கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்தபோது அவரது மரணத்தில் மர்மங்கள் புதைந்திருப்பதாக பலரும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினர். திமுகவினரும், காங்கிரசாரும் ஜெய்., மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து சொல்லி வருகின்றனர். அதிமுவினரும் கூட இதை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினர்.

ஜெ., மரணத்தில் உள்ள மர்மங்கள்…  வாழப்பாடி ராமசுகந்தன் ஏற்படுத்தும் பரபரப்பு

காய்ச்சல் என்று சொல்லித்தான் ஜெயலலிதாவை அப்பல்லோவில் சேர்த்தார்கள். அப்புறமாக கால்களை அகற்றியதாகவும் அதிர்ச்சி செய்திகள் வந்தன. 74 நாட்கள் சிகிச்சைக்கு அப்புறமும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும், முதல்வராக இருந்ததால் அவரது சிகிச்சை குறித்த விபரங்களை வெளிப்படையாக தெரிவிக்காததையும் வைத்து, அவரது மரணத்தில் மரணம் இருக்கிறது என்றும், திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவோம் என்று திமுகவினர் சொல்லி வருகின்றனர்

இந்நிலையில், திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வாழப்பாடி ராமசுகந்தனும் அதையே தெரிவித்திருக்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவர், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை அதிமுக, பாஜக அல்லாத ஆட்சி வந்தால் மட்டுமே வெளியே வரும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஜெ., மரணத்தில் உள்ள மர்மங்கள்…  வாழப்பாடி ராமசுகந்தன் ஏற்படுத்தும் பரபரப்பு

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி, 6 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை மத்திய அமைச்சராகவும் இருந்தார். நரசிம்மராவ் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர், காங்கிரசில் இருண்டு விலகி திவாரி காங்கிரசுடன் இணைந்துகொண்டு, அக்கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் ஆனார். 98ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியை தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்து வாஜ்பாய் அமைச்சரவையில் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஆனார். 2001ம் ஆண்டில் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் இணைந்த ராமமூர்த்தி, 2002ல் மாரடைப்பால் உ யிரிழந்தார். வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம சுகந்தன்.

வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் தெரிவித்துள்ள இந்த கருத்து, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.