வாயை வாடகைக்கு விட்டு.. நீங்க செய்வதுதான் அயோக்கிய அரசியல்…வறுபடும் நாஞ்சில் சம்பத்

 

வாயை வாடகைக்கு விட்டு.. நீங்க செய்வதுதான் அயோக்கிய அரசியல்…வறுபடும் நாஞ்சில் சம்பத்

ஆன்மீக அரசியல் என்பது அயோக்கிய அரசியல் என்று சொல்லி அதிரவைத்த நாஞ்சில் சம்பத், ரஜினி ரசிகர்களிடம் சிக்கி வறுபட்டுக்கொண்டிருக்கிறார்.

மதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த நாஞ்சில்சம்பத் அங்கிருந்து அதிமுகவுக்கு தாவி, அங்கிருந்து திமுகவுக்கு தாவியவர். ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து அவர் மேலும், ஆன்மீக அரசியல் என்றாலே அது காவி அரசியல், பாசிச அரசியல், பாஜக அரசியல், மக்களை முட்டாளாக்கும் அரசியல் என்று தெரிவித்திருந்தார்.

வாயை வாடகைக்கு விட்டு.. நீங்க செய்வதுதான் அயோக்கிய அரசியல்…வறுபடும் நாஞ்சில் சம்பத்

ஜெயலலிதாவின் துணிச்சல் ரஜினிக்கு இருக்குதா?என்று கேள்வி எழுப்பியவர், காவியத்தலைவன் கலைஞரோடு அட்டக்கத்தி ரஜினியை ஒப்பிட வேண்டாம் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார் என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார? வாங்கிய பணத்தை எங்கு முதலீடு செய்திருக்கிறார் என்பதையாவது சொல்லி இருக்கிறரா? இவர் எப்படி ஊழலை பற்றி பேசலாம்? என்றெல்லாம் ரஜினியை கடுமையாக விமர்சித்திருந்தார் நாஞ்சில் சம்பத்.

இதற்கு ரஜினி ரசிகர்கள் சூடான பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

வாயை வாடகைக்கு விட்டு.. நீங்க செய்வதுதான் அயோக்கிய அரசியல்…வறுபடும் நாஞ்சில் சம்பத்

நீங்க செய்வதுதான் அயோக்கிய அரசியல். ஆன்மீகம் என்றால் மதவாதமில்லை. இது கூட தெரியலை. உங்களை எல்லாம் படிப்பாளி, அறிவாளின்னு இத்தனை நாளும் நம்பி ஏமாந்துட்டேன் என்றும்,

யோக்கியன் வரான் சொம்ப எடுத்து வை…, ஜால்ரா தட்ட உன்னை மாதிரியான ஆளு கிடையாது…, துப்பினா துடைச்சுப்போம் என்பது சுயமரியாதை அரசியல். வாயை வாடகைக்கு விட்டு.. என்று ஏகத்துக்கும் போட்டு தாளித்து எடுக்கிறார்கள் நாஞ்சில் சம்பத்தை.

ஒவ்வொரு கட்சியில் இருக்கும்போதும் பிற கட்சியை திட்டிய வீடியோவை வெளியிட்டும், நாஞ்சில் சம்பத்தை வறுத்தெடுத்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.