இதோ இன்னொரு தரகு வியாபாரி… தங்கர்பச்சான் மீது விசிக கடும் தாக்கு

 

இதோ இன்னொரு தரகு வியாபாரி… தங்கர்பச்சான் மீது விசிக கடும் தாக்கு

தமிழருவி மணியனை தரகுவியாபாரி என்று சொன்ன வன்னி அரசு, தங்கர்பச்சானை இதோ இன்னொரு தரகு வியாபாரி என்கிறார்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து அதிகமாக/கடுமையாக விமர்சித்து வருகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. ரஜினி வலதுசாரி அரசியல்வாதியாக காட்டிக்கொள்ள விரும்புகிறார். தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளராக யாரை நியமித்திருக்கிறார் என்பதன் மூலம் அவர் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறாரோ என்கிற அய்யம் எழுகிறது. அவர் இங்கே பாஜகவின் இன்னொரு முகமாகவே இயங்குவார் என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

இதோ இன்னொரு தரகு வியாபாரி… தங்கர்பச்சான் மீது விசிக கடும் தாக்கு

விசிகவின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் ரஜினியை விமர்சித்திருக்கும் நிலையில், அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு

ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தவர்களில் அவரது ரசிகர்களை விட பாஜகவினரும் குருமூர்த்தி போன்றவர்களுமே.
இதிலிருந்தே ரஜினியின் கட்சி துவங்குவது, பாஜகவின் மறைமுக செயல்திட்டம் தான் என தமிழ்நாட்டு மக்களுக்கு புரியாதா? என்றும், ஆன்மீக அரசியலே
பாஜகவின் பினாமி அரசியல் தான்! அதாவது, மதவாத அரசியல் வெறுப்பரசியல் ஏமாற்று அரசியல் தான். ரஜினிகாந்தின் தரகுவியாபாரி தமிழருவி மணியன் என்று விமர்சித்திருந்தார்.

தமிழருவி மணியனை தரகுவியாபாரி என்று சொன்ன வன்னி அரசு, தங்கர்பச்சானை இதோ இன்னொரு தரகு வியாபாரி என்கிறார்.

இதோ இன்னொரு தரகு வியாபாரி… தங்கர்பச்சான் மீது விசிக கடும் தாக்கு

ரஜினி கட்சி தொடங்குவதற்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தங்கர்பச்சான், ’’வளர்த்துவிட்ட தமிழக மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக அரசியல் தொண்டு ஆற்ற வரும் அண்ணன் ரஜினிகாந்த் அவர்களை வரவேற்கிறேன்! என்று தெரிவித்துள்ளார்.

’’தமிழக அரசி்யலை வணிகமாக மாற்றிய அரசியல் வாதிகள், அரசியல் தரகர்கள், அரசியல் கட்சிகளின் இணையக்கூலிகள் கலக்கத்தில் உறக்கமில்லாமல் கதறுவார்கள், புலம்புவார்கள்! அவர்களை எல்லாம் புறந்தள்ளி மக்கள் குறித்து மட்டுமே கவனம் செலுத்துங்கள்’’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

ரஜினியை வரவேற்கும் தங்கர்பச்சானை, இதோ இன்னொரு தரகு வியாபாரி என்கிறார் வன்னி அரசு.