ரஜினி வீட்டு வாசலில் தவமிருக்கும் பாஜகவின் நிலை பரிதாபத்துக்குரியது…தமிழருவிக்கு வந்த புது தலைவலி

 

ரஜினி வீட்டு வாசலில் தவமிருக்கும் பாஜகவின் நிலை பரிதாபத்துக்குரியது…தமிழருவிக்கு வந்த புது தலைவலி

தலைவலிக்கு மேல் தலைவலி வந்து தாங்கமுடியாமல் தவிக்கிறார் ரஜினி கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன்.

அருவியில் இருந்து நீர் கொட்டுவதைப்போல வார்த்தை தடுமாற்றம் இல்லாமல் பேசுவதைப்பார்த்த பெருந்தலைவர் காமராஜர், ’தமிழருவி’ என்று பாராட்டியதால், மணியனாக இருந்தவர் தமிழருவி மணியன் ஆனார். காலமாற்றத்தில் அந்த தமிழருவியின் பேச்சில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்தான் தற்போது பரபரப்பை ஏற்பட்டிருக்கிறது.

காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸில் இருந்த தமிழருவின் மணியன், காமராஜரின் மறைவுக்குப் பிறகு ஜனதா கட்சியில் இணைந்தார். பின்னர் லோக்சக்தியில் இணைந்தவர், அடுத்து இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். 2008-ல் இந்திய தேசிய காங்கிரசில் இருந்து விலகி, 2009-ல் காந்திய மக்கள் இயக்கத்தினை ஆரம்பித்தார்.

ரஜினி வீட்டு வாசலில் தவமிருக்கும் பாஜகவின் நிலை பரிதாபத்துக்குரியது…தமிழருவிக்கு வந்த புது தலைவலி

இவர் கடந்த 2014ம் ஆண்டில், ரவுத்திரம் இதழின் கேள்வி-பதில் பகுதியில், ரஜினிகாந்த் வந்தால் ரசவாதம் நிகழும் என்று பா.ஜ.க நம்புவது சரியா? என்ற கேள்விக்கு,

‘’தமிழகத்தின் ரட்சகராக ரஜினியை ஆராதிப்பவர்கள் அவரால் தமிழினம் பெற்ற நன்மைகளைக் கொஞ்சம் பட்டியலிட்டுச் சொன்னால் நல்லது’’என்று சொன்னவர், ’’கலையுலகக் கவர்ச்சியை மூலதானமாக்கி வளர்ந்தது தி.மு.கழகம். திரைப்படங்களில் வெற்றிகரமாக வளர்த்தெடுத்த ஏழைப்பங்காளன் தோற்றத்தைப் பயன்படுத்தி எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது அ.தி.மு.கழகம். எம்.ஜி.ஆருடன் பல படங்களில் சேர்ந்து நடித்து, அவரால் அரசியலுலகில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயலலிதாவின் தலைமையில் இன்றளவும் இயங்கிக் கொண்டிருப்பது அ.தி.மு.க. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் சிக்குண்டு கிடக்கும் தமிழகத்தக் காப்பாற்றவும், மாற்று அரசியலை இந்த மண்ணில் மலரச் செய்யவும் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவுக்காக அவருடைய வீட்டு வாசலில் தவமிருக்கும் பா.ஜ.க.வின் நிலை பரிதாபத்துக்குரியது’’என்றவர்,

ரஜினி வீட்டு வாசலில் தவமிருக்கும் பாஜகவின் நிலை பரிதாபத்துக்குரியது…தமிழருவிக்கு வந்த புது தலைவலி

‘மாற்று அரசியல்’ என்றால் என்னவென்று உண்மையில் பா.ஜ.க.வினர் உணர்ந்திருந்தால் ரஜினிக்கு வலை விரிக்கும் வேலையில் ஈடுபடமாட்டார்கள். நேற்றைய ரஜினியின் கவலை எந்திரன், கோச்சடையான் படங்களின் வெற்றி. இன்றைய ரஜினியின் ஒரே கவலை வரவிருக்கும் ‘லிங்கா’ படத்தின் வசூல் இவற்றைக் கடந்து ரஜினியால் வேறெதற்கும் கவலைப்பட இயலாது என்று கடுமையாக விமரிச்திருந்தார்.

சமீப காலங்களாக ரஜினியை கட்சி ஆரம்பிக்கச்சொல்லி வந்தவர் தமிழருவி மணியன். தற்போது ரஜினி கட்சியும் தொடங்க இருக்கும் சூழலில் அக்கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்திருக்கிறார்.

ரஜினி வீட்டு வாசலில் தவமிருக்கும் பாஜகவின் நிலை பரிதாபத்துக்குரியது…தமிழருவிக்கு வந்த புது தலைவலி

இந்நிலையில், ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்து தமிழருவி மணியன் கருத்து தெரிவித்ததாக பிரபல ஊடகத்தில் செய்தி வெளியானது. ஆனால், தான் அப்படி செய்யவில்லை என்றும், ரஜினியிடம் இருந்து என்னை பிரிப்பதற்காக சதி நடக்கிறது என்று தமிழருவி மணியன் சொல்லியிருந்த நிலையில் அவர் கடந்த 2014ம் ஆண்டில் ரஜினி குறித்து விமர்சித்ததை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இது தமிழருவி மணியனுக்கு மேலும் தலைவலியாக அமைந்திருக்கிறது.