விசிக எம்.பி. அடித்த கமெண்ட்: கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்

 

விசிக எம்.பி. அடித்த கமெண்ட்: கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்.பியுமான ரவிக்குமார், ‘’திண்டுக்கல் இடைத் தேர்தலில் எம்ஜிஆர் செய்ததுபோல் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினால் ரஜினி தன்னம்பிக்கையோடு களமிறங்கியிருக்கிறார் என்று பொருள்’’என்றும்,

தேர்தல் ஒத்திப்போடப்பட்டால் ரஜினியின் செல்வாக்கின்மீது பாஜகவுக்கும் நம்பிக்கையில்லையெனப் பொருள் ’’என்று தெரிவித்துள்ளார்.

விசிக எம்.பி. அடித்த கமெண்ட்: கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். ரவிக்குமாரின் இந்த பதிவுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

’’பொருளை பற்றி பேசுவதற்கு தங்கள் கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது. 2 சீட் மற்றும் 10 சீட்களுக்கு உங்கள் சமூகத்தை அடகு வைத்த பெருமை தான் உங்களுக்கு உள்ளது. உங்களுக்கு வக்கு இருந்தால் உங்கள் சின்னத்தில் போட்டியிடுங்கள்’’என்றும், .

’’அவ்வளவு தன்னம்பிக்கை இருந்தால் 2019 பாராளுமன்றத் தேர்தலில் சொந்த சின்னத்தில் நிற்க வேண்டியது தானே? முதலில் தன்னுடைய முதுகை திரும்பி பாருங்கள்’’என்றும்,

’’நீங்கள் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு வென்றால் சரக்கும் மிடுக்கும் உள்ளவர் என்பது பொருள். ஒதுக்கீட்டுத் தொகுதி என்றால் திமுக செல்வாக்கு என்று பொருள். உங்கள் கட்சி செல்லாக்காசு எனப்பொருள்’’என்றும் கொந்தளிக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.