ஆழ்ந்த தியானத்தில் ரஜினிக்கு வந்த உத்தரவு! கட்சியை அறிவித்ததின் பரபரப்பு பின்னணி

 

ஆழ்ந்த தியானத்தில் ரஜினிக்கு வந்த உத்தரவு!  கட்சியை அறிவித்ததின் பரபரப்பு பின்னணி

அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் தனது மாவட்ட நிர்வாகிகளூடன் கடந்த வாரம் ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினர். அப்போது, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டிருப்பதால் உடல் நிலையில் பிரச்சனை இருக்கிறது. ஒருநாளைக்கு 14 மாத்திரைகள் சாப்பிட வேண்டிய நிலையில் இருக்கிறேன். இதில் தொற்றும் ஏதும் ஏற்பட்டால் நிலைமை வேறு மாதிரி ஆகிவிடும். அதனால் நீங்களே ஒரு முடிவை சொல்லுங்கள். கட்சியா? என் உயிரா? என்று கேட்டிருக்கிறார் ரஜினி.

ஆழ்ந்த தியானத்தில் ரஜினிக்கு வந்த உத்தரவு!  கட்சியை அறிவித்ததின் பரபரப்பு பின்னணி

ரஜினி இப்படி ஒரு கேள்வியை முன்வைப்பார் என்பதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத நிர்வாகிகள், தர்மசங்கடத்தில் நெளிந்தாலும், தலைவா நீங்க நல்லா இருந்தாலே போதும் கட்சி வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.

ரஜினி கட்சி தொடங்குவார் என்பதில் கொஞ்சம் நம்பிக்கை வைத்திருந்த ரசிகர்களும் நம்பிக்கையை இழந்து சென்றூவிட்டனர். ரஜினியும் கட்சி இல்லை என்பதைத்தான் அறிவிப்பார் என்றும் நினைத்திருந்தனர்.

ஆனால் திடீரென்று நேற்று கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார் ரஜினி. நேற்று முன் தினம் தமிழருவி மணியன் ரஜினியை சந்தித்தபோதுகூட, ரஜினி உறுதியான முடிவை சொல்லாததால்தான், அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது சுரத்து இல்லாமல் பேசினார்.

ஆழ்ந்த தியானத்தில் ரஜினிக்கு வந்த உத்தரவு!  கட்சியை அறிவித்ததின் பரபரப்பு பின்னணி

ஆனால் திடீரென்று நேற்று ரஜினி முடிவெடுத்தது எப்படி?

வழக்கமாக வியாழக்கிழமைகளில் காலை நேரத்தில் தியானத்தில் ஈடுபடுவது ரஜினியின் வழக்கம். இந்த தியானம் சுமார் 2 மணி நேரம் வரை கூட நீடிக்குமாம். ஆழ்ந்த தியானத்துக்கு செல்லும் ரஜினி அப்போது தனக்கு கிடைக்கும் உத்தரவின் அடிப்படையில் தான் முடிவுகளை எடுப்பாராம்.

அப்படித்தான் நேற்று காலை தியானத்தின் போது கிடைத்த உத்தரவு தான் அரசியல் கட்சி அறிவிப்பு என்கிறார்கள். இதே வியாழக்கிழமை செண்டிமெண்ட் அடிப்படையில்தான் வரும் 31 ஆம் தேதியை தேர்வு செய்துள்ளார் ரஜினிகாந்த் என்கிறார்கள்.

வரும் டிசம்பர் 31ம் தேதி அன்று காலையும் இதேபோல் தியானம் மேற்கொண்ட பின்னர் கட்சியின் பெயரையும் தொடக்க நாளையும் அறிவிப்பார் என்கிறார்கள். அனேகமாக பொங்கல் திருநாளாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.