ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை! தமிழருவி மணியன் பரபரப்பு

 

ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை! தமிழருவி மணியன் பரபரப்பு

கட்சி தொடங்குவதில் வேகம் காட்டி வந்த ரஜினி கொரோனா தொற்றின் காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் கடந்த சில மாதங்களாக தயக்கம் காட்டி வந்தார். கட்சி தொடங்கி போய்க்கொண்டிருக்கும் போது திடீரென்று ஏதும் ஆகிவிட்டால் என்ன செய்வது என்றே நிர்வாகிகளிடமும் ஆலோசித்து வந்தார். ஆனால் திடீரென்று, என் உயிரே போனாலும் பரவாயில்லை என்று கட்சி தொடங்க முன்வந்திருக்கிறார்.

ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை! தமிழருவி மணியன் பரபரப்பு

அரசியல் அழுத்தத்தினால்தான் ரஜினி கட்சி தொடங்குகிறார் என்ற விமர்சனம் இருக்கும் நிலையில், ரஜினியால் பிரச்சாரத்திற்கு செல்ல முடியுமா என்ற கேள்வி இருக்கும் நிலையில், தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் மக்களிடையே கொள்கைகளை கொண்டு போய் சேர்க்க முடியுமா என்றும் எழும் கேள்விகளுக்கு எல்லாம் ரஜினி கட்சி்யின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மனம் திறந்திருக்கிறார்.

ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை! தமிழருவி மணியன் பரபரப்பு

சொன்னதை செய்து காட்டுபவர் ரஜினிகாந்த். 2017ல் அவர் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று சொன்னதைத்தான் இப்போது உறுதிபடுத்தி இருக்கிறார். அவர் வார்த்தை தவறாத மனிதர். அதைத்தான் நிரூபித்திருக்கிறார். மற்றபடி ரஜினிகாந்த் கட்சி தொடங்கியதற்கு எந்த அழுத்தமும் இல்லை என்று தெரிவித்துள்ள தமிழருவி மணியன்,

ரஜினிக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகம் இருப்பதால் மற்ற தலைவர்களைப்போல் அதிகம் பிரச்சாரம் செய்ய அவசியமில்லை. அவரின் உடல்நிலையை கருதி கிராமங்களில் எல்.இ.டி. திரை மூலமாக பிரச்சாரம் செய்வார் ரஜினி என்று தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் வேட்பாளர் தான் இல்லை என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக இருக்கிறார். ஆனால், மக்கள் அவர் தான் முதல்வர் வேட்பாளராக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.