ரஜினிக்கு கே.பாலசந்தர் இல்லத்திலிருந்து வந்த வாழ்த்து

 

ரஜினிக்கு கே.பாலசந்தர் இல்லத்திலிருந்து வந்த வாழ்த்து

என்னை வாழ வைத்த தெய்வம் ரஜினிகாந்த் அடிக்கடி இயக்குநர் கே.பாலசந்தரை குறிப்பிடுவார். சினிமாவில் ரஜினியை அறிமுகப்படுத்திய பாலசந்தர் குறித்து ரஜினி பல சந்தர்ப்பங்களில் நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.

பெரும் புகழோடும் நல்ல வசதியோடும் வாழ்கிறேன் என்றால் அதற்கு காரணம் கே.பாலசந்தர் சார்தான். அவர்தான் என்னுடைய மைன்ஸ் பாயிண்ட் எல்லாம் சரி செய்து எனக்குள் இருந்த பிளஸ் பாயிண்டுகளை எனக்கு சொல்லி என்னை முழு நடிகனாக்கினார்.

ரஜினிக்கு கே.பாலசந்தர் இல்லத்திலிருந்து வந்த வாழ்த்து

நான்கு படங்களில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து என்னை ஒரு நட்சத்திரம் ஆக்கினார்.

கேபி சார் என்னை அறிமுகப்படுத்தவில்லை என்றாலும் நான் சினிமாவுக்கு வந்திருப்பேன். கன்னட சினிமாக்களில் ஒன்றிரண்டு படங்களில் வந்து போயிருப்பேன். ஆனால், கே.பி.சார் கொடுத்த நல்ல கேரக்டர்தான் என்னை பெரிய அளவுக்கு கொண்டு போனது என்று சொல்லும் ரஜினி,

தன் வாழ்க்கையில் அம்மா, அப்பா, அண்ணன் வரிசையில் கே.பி.சார் இருக்கார் என்று குறிப்பிடுவார்.

ரஜினிக்கு கே.பாலசந்தர் இல்லத்திலிருந்து வந்த வாழ்த்து

பாலசந்தரின் மீதுள்ள மரியாதையினால் அவரின் கவிதாலயா நிறுவனத்துக்கு நெற்றிக்கண், புதுக்கவிதை, நான் மகான் அல்ல, ஸ்ரீராகவேந்திரா, சிவா, வேலைக்காரன், அண்ணாமலை, முத்து ஆகிய படங்கள் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

ரஜினிகாந்த் தற்போது அரசியலுக்கு வருவதாகவும், கட்சி தொடங்கப்போவதாகவும் அறிவித்திருப்பதால், ‘’எங்கள் சூப்பர் ஸ்டாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது ஆச்சரியமான பயணம். இந்த அரசியல் பயணத்தில் வெற்றியடைய விரும்புகிறோம்.’’ என்று வாழ்த்தியிருக்கிறது கவிதாலயா நிறுவனம்.