ரஜினியின் பின்னால் பாஜக இருக்கிறதா? ஆ.ராசா

 

ரஜினியின் பின்னால் பாஜக இருக்கிறதா? ஆ.ராசா

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதால் யாருக்கு பாதகம் என்ற பேச்சு எழுந்து, திமுகவுக்குத்தான் பாதிப்பு என்று தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவை சீக்கிரத்தில் அறிவிப்பதாக ரஜினி சொன்ன அன்றைய தினம், திமுக எம்.பி. கனிமொழியிடம், ரஜினி கட்சியால் திமுகவுக்கு பாதிப்பா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘’அவர் அரசியலுக்கு வருவதாக சொல்லட்டும். அப்புறம் தெரிவிக்கிறேன்’’ என்று சொல்லி இருந்தார்.

ரஜினியின் பின்னால் பாஜக இருக்கிறதா? ஆ.ராசா

ரஜினி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தாலும் தேர்தலில் தெரியும். ரஜினி அரசியல் வருகையால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. திமுகவின் வாக்கு வங்கியையும் பாதிக்காது.

மதச்சார்பற்ற அரசியல் உருவாக்குவதாக ரஜினி அறிவித்திருக்கிறாரே? என்று கேள்விக்கு, ஆன்மிகத்தையும் மதத்தையும் பிரிக்க முடியாது என்று பதில் சொன்ன திமுக எம்.பி., ஆ.ராசா, ரஜினியின் அரசியல் வருகைக்கு பின்னால் பாஜக உள்ளதா என்று தற்போது சொல்ல முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.