பிஜேபி நிர்வாகிதான் ரஜினி கட்சிக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர்! -உடையும் குட்டு!

 

பிஜேபி நிர்வாகிதான் ரஜினி கட்சிக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர்! -உடையும் குட்டு!

ஜனவரி மாதத்தில் கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கும் ரஜினிகாந்த், இன்று நடந்த செய்தியாளர்கள சந்திப்பில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி என்றும், கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் என்றும் அறிவித்த ரஜினி, அவ்விருவரையும் அறிமுகப்படுத்தினார்.

பிஜேபி நிர்வாகிதான் ரஜினி கட்சிக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர்! -உடையும் குட்டு!

ரஜினியுடன் கட்சி தொடர்பாக கடந்த சில வருடங்களாகவே தமிழருவின் மணியன் பயணித்து வருகிறார். திடிரென்று யார் இந்த அர்ஜூனமூர்த்தி என்ற கேள்வி எழுந்தது.

பிஜேபி நிர்வாகிதான் ரஜினி கட்சிக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர்! -உடையும் குட்டு!

இந்நிலையில், பாஜகவின் தமிழ்மாநில அறிவுசார் பிரிவின் தலைவராக இருக்கும் தொழிலதிபர் அர்ஜூன மூர்த்தி என்று தெரியவந்திருக்கிறது. பாஜக தான் ரஜினியை இயக்குகிறது என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து இதையே சொல்லி வரும் நிலையில் பாஜகவின் நிர்வாகி ஒருவர் ரஜினி கட்சிக்கும் நிர்வாகியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிஜேபி நிர்வாகிதான் ரஜினி கட்சிக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர்! -உடையும் குட்டு!

மேலும், பாஜகவின் பின்புலத்தில் இயங்குவதால்தான், ஆன்மீக அரசியல் என்ற முன்வைக்கிறாரா ரஜினிகாந்த் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

பிஜேபி நிர்வாகிதான் ரஜினி கட்சிக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர்! -உடையும் குட்டு!