கவர்னர் பதவியை உதறித்தள்ளிய ரஜினிகாந்த்!

 

கவர்னர் பதவியை உதறித்தள்ளிய ரஜினிகாந்த்!

கவர்னரா? முதல்வரா? என்ற நிலையில் முதல்வர்தான் என்ற முடிவை எடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்க வேண்டும் என்று ஒரு கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதே நேரத்தில் ரஜினிகாந்த் கட்சி தொடங்கக்கூடாது என்று என்று இரண்டு கட்சிகள் அழுத்தம் கொடுத்து வந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.

கவர்னர் பதவியை உதறித்தள்ளிய ரஜினிகாந்த்!

எதிர்பார்த்திராத இடத்தில் இருந்தெல்லாம் பொலிட்டிக்கல் பிரஷர் வருது என்று மன்ற நிர்வாகிகள் கூட்டத்திலும் தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.

தனிக்கட்சி தொடங்கவில்லை என்றால், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் இருந்து ரஜினியிடம் கேட்டுக்கொண்டதாகவும், அப்படி வாய்ஸ் கொடுத்தால், கவர்னர் பதவி வழங்கி கவுரவிக்கப்படும் என்றும் பாஜக தரப்பில் ரஜினியிடம் கூறப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.

கவர்னர் பதவியை உதறித்தள்ளிய ரஜினிகாந்த்!

தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரா என்று மூன்று மாநிலங்களிலில் ரஜினி விரும்பும் மாநிலத்தில் அவரை கவர்னராக நியமிக்கப்படும் என்று தெரிவித்ததாகவும் தகவல்.

பால்தாக்கரே மீது தனிப்பாசம் வைத்திருக்கும் ரஜினிகாந்த், மகாராஷ்டிரா மாநிலத்தை தேர்தெடுப்பார் என்றே பாஜக தரப்பில் அதிகம் எதிர்பார்த்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால், கவர்னரா? முதல்வரா? என்ற நிலை வந்தபோது, கட்சி தொடங்குவது என்ற முடிவை எடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.