பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்த்த ராகேஷ் நாய் திடீர் மரணம்

 

பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்த்த ராகேஷ் நாய் திடீர் மரணம்

பிரதமர் நரேந்திரமோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் ராகேஷ் நாய் பற்றி குறிப்பிட்டு பேசியிருந்தார். அந்த ராகேஷ் உடல்நலக்குறைவினார் உயிரிழந்தது. ஆயுதப்படை வீரர்கள் சகல மரியாதைகளுடன் ராகேஷை அடக்கம் செய்தனர்.

குஜராத் மாநிலத்தின் மீரட்டில் ஆயுதப்படை காவலர்கள் பயிற்சியின் போது அங்கிருக்கும் ராகேஷ் டீ கடையில் டீ குடிப்பது வழக்கம். அந்த ராகேஷ், ஒரு சாலையோர நாயை பராமரித்து வந்தார். கொரோனா முடக்கத்தினால் ராகேஷ் திடீரென தந்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்த்த ராகேஷ் நாய் திடீர் மரணம்

ராகேஷ் இல்லாததாலும், உணவு இல்லாததாலும் அந்த நாய் தவித்து வந்தது. தினமும் பார்த்து பழக்கமாகிவிட்டதால் பயிற்சி வீரர்களும், காவல்துறை தலைஐ கான்ஸ்டபிள் ஆசிஸ் உர் ரெஷ்மான் கானும் அந்த நாயினை பராமரித்து வந்தார்கள். அந்த நாயை வளர்த்தவர் ராகேஷ் என்பதால், அந்த ஐந்து வயதான நாய்க்கும் ராகேஷ் என்றே பெயர் வைத்தனர்.

தங்களை சுற்றி இருக்கும் ஏழைகளை பற்றியும் , மற்ற விலங்குகளை பற்றியும் மக்கள் கவலைப்படுவதை நினைத்து மகிழ்கிறேன் என்று சொல்லிவிட்டு, ராகேஷ் நாய் பற்றிய சம்பவத்தினை தந்து மன் கி பாத் உரையில் குறிப்பிட்டார் பிரதமர் மோடி.

அந்த ராகேஷ், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பினால் நேற்று முன் தினம் உயிரிழந்தது. சகல மரியாதைகளுடன் அந்த ராகேஷை அடக்கம் செய்தனர்.