மா.செ.’க்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை

 

மா.செ.’க்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை

திமுக மா.செக்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டமன்ற அனைத்து கட்சிகளின் சார்பில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். அதற்காக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.

மா.செ.’க்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை

டெல்லியில் நடைபெற்றும் வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஆலோசனை செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கழகச்செயலாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

மா.செ.’க்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று 3.1.2020 காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறுகிறது. மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.