1800 கோடியில் மத்திய அரசின் உப்புமா திட்டம்? இந்தியா நெஜமாவே வல்லரசு நாடு தான்!

 

1800 கோடியில் மத்திய அரசின் உப்புமா திட்டம்? இந்தியா நெஜமாவே வல்லரசு நாடு தான்!

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பசித்த குழந்தைகளுக்கு பால் இல்லை. நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறது என்று பொருளாதார வல்லுநர்கள் இந்தியாவிற்கு எச்சரிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தேசத்தை வல்லரசாக மாற்றுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இதெல்லாம் கூட பரவாயில்லை.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பசித்த குழந்தைகளுக்கு பால் இல்லை. நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறது என்று பொருளாதார வல்லுநர்கள் இந்தியாவிற்கு எச்சரிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தேசத்தை வல்லரசாக மாற்றுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இதெல்லாம் கூட பரவாயில்லை. ஆனால், தற்போது நாட்டில் உள்ள சிறைகள் போதவில்லை..

jail

இன்னும் வசதிகளுடன், சிறைகளில் நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த புதிதாய் 1800 கோடி ரூபாய் செலவில் 199 புதிய சிறைகளைக் கட்டுவதற்கு திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு.
இந்த 1800 கோடிகளில், 1,572 சிறைக்காவலர்கள் தங்குவதற்கான அறைகளும், 8568 சிறை அலுவலர்கள் தங்கும் இடமும் உள்ளடக்கி 199 சிறைகளை கட்ட திட்டமிட்டுள்ளது. குற்றங்களை முழுமையாக நடைப்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அரசு, குற்றவாளிகள் அதிகரித்திருப்பதாகவும், அவர்களை அடைத்து வைப்பதற்கான இடம் போதவில்லை என்றும் திட்டங்களை வகுத்து 1800 கோடி ரூபாய்கள் செலவு செய்யும் யோசனையை மூன்று வேளை உணவு கிடைக்காத  பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பார்த்து வருகிறார்கள். 

jail

ம்ம்… நாட்டில் ஒரு சிறைச்சாலை கூட இல்லாமல் போக வேண்டிய நாள் தான் உண்மையான விடுதலை என்று சிந்தித்த தலைவர்கள் எல்லாம் இருந்த காலங்கள் இனி வரவே வராது போல!