சிக்கன்பிரியாணி-ரூ.180, பட்டாசு -ரூ.600: வேட்பாளர்களுக்கான விலைப்பட்டில் வெளியீடு

 

சிக்கன்பிரியாணி-ரூ.180, பட்டாசு -ரூ.600: வேட்பாளர்களுக்கான விலைப்பட்டில் வெளியீடு

சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் அருண்பிரகாஷ் இருவரும் இணைந்து வேட்பாளர்கள் செலவினங்களுக்கான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில், ஒவ்வொரு 30,80,000 ரூபாய் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்றிருக்கிறது.

தவிர, வேட்பாளர்கள் தங்கள் செலவுகளை கணக்கீடு செய்வதற்கு வசதியாக, விலை நிர்ணய பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.

சிக்கன்பிரியாணி-ரூ.180, பட்டாசு -ரூ.600: வேட்பாளர்களுக்கான விலைப்பட்டில் வெளியீடு

பந்தல் -3,500 ரூபாய், சாமியனா பந்தல் – 9,500, 1000 போஸ்டர்கள் -12,500, கட் -அவுட் ஒரு அடிக்கு 65 ரூபாய், பட்டாசு -600, வாழை மரம் -700, தொப்பி -50 என்றும், 5ஸ்டார் ஓட்டல்கள் – 7,500 ரூபாய் என்றும், 3 ஸ்டார் விடுதிகளில் தங்க 5000 ரூபாய் என்றும், சாதாரண விடுதிகளுக்கு 3,500 ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சாப்பாடுக்கு 100ரூபாய் என்றும், கலவசை சாதத்துக்கு 50 ரூபாய் என்றும், சிக்கன் பிரியாணிக்கு180 ரூபாய் என்றும், மட்டன் பிரியாணிக்கு 200 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டீ -10ரூ., காபி -15 ரூ., மோர் -10 ரூ., ரஸ்னா -20 ரூ. என்றும், தண்ணீர் பாட்டிலும் 20 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.