லேக் ராணுவ மருத்துவமனையில் 18 வீரர்கள், பிற மருத்துவமனைகளில் 58 வீரர்கள் சிகிச்சை…. ராணுவம் தகவல்

லேக் ராணுவ மருத்துவமனையில் 18 வீரர்கள், பிற மருத்துவமனைகளில் 58 வீரர்கள் சிகிச்சை…. ராணுவம் தகவல்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் இந்திய-சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 43 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல். ஆனால் அந்நாட்டு ராணுவம் தங்களது உயிர் இழப்பை வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை.

லேக் ராணுவ மருத்துவமனையில் 18 வீரர்கள், பிற மருத்துவமனைகளில் 58 வீரர்கள் சிகிச்சை…. ராணுவம் தகவல்

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயம் அடைந்தவர்களில் தற்போது வரை யாரும் மோசமான நிலையில் இல்லை. லேக் அரசு மருத்துவமனையில் 18 வீரர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இன்னும் 15 நாட்களில் பணிக்கு திரும்பி விடுவர். பிற மருத்துவமனைகளில் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் 58 வீரர்களும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஒரு வார காலத்துக்குள் பணிக்கு திரும்பி விடுவர் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தில் யாரும் காணாமல் போகவில்லை என ராணுவம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

லேக் ராணுவ மருத்துவமனையில் 18 வீரர்கள், பிற மருத்துவமனைகளில் 58 வீரர்கள் சிகிச்சை…. ராணுவம் தகவல்

இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் நேற்று இந்திய மற்றும் சீன ராணுவங்களின் மேஜர் ஜெனரல் அதிகாரிகள் அளவிலான ராணுவ பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பேச்சுவார்த்தைகள் முடிவில்லாமல் இருந்ததாக தகவல்.