திருவள்ளூரில் புன்னகையை தேடி திட்டத்தின் கீழ் 18 குழந்தைகள் மீட்பு!

 

திருவள்ளூரில் புன்னகையை தேடி திட்டத்தின் கீழ் 18 குழந்தைகள் மீட்பு!

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து வந்த மற்றும் காணாமல் போன 18 குழந்தைகளை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் காணாமல் போன குழந்தைகளை மீட்கும் விதமாக கடந்த 1ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை “புன்னகையை தேடி” திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.

இதனையொட்டி, திருவள்ளூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு ஏஎஸ்பி மீனாட்சி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் சைல்டு லைன் ஆகியோர் இணைந்து மாவட்டம் முழுவதும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

திருவள்ளூரில் புன்னகையை தேடி திட்டத்தின் கீழ் 18 குழந்தைகள் மீட்பு!

இதில், மாவட்டம் முழுவதும் குழந்தை தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த 9 குழந்தைகளை மீட்கப்பட்டனர். மேலும், காணாமல் போன சிறுவர், சிறுமிகள் என 9 பேரை மீட்டதுடன், மாவட்டம் முழுவதும் உள்ள காப்பகங்களை ஆய்வுசெய்து, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாம்களின்போது, மாவட்ட எஸ்.பி.,அரவிந்தன் முன்னிலையில் மீட்கப்பட்ட 18 குழந்தைகளை ஆஜர்படுத்திய போலீசார், அவர்களுக்கு அறிவுரை வழங்கி பெற்றோர்களிடம் குழந்தைகளை அனுப்பி வைத்தனர்.