விழுப்புரம் அருகே கேக் வாங்கி சாப்பிட்ட சிறுவர்,சிறுமிகள் 18 பேருக்கு வாந்தி, மயக்கம்!

 

விழுப்புரம் அருகே கேக் வாங்கி சாப்பிட்ட சிறுவர்,சிறுமிகள் 18 பேருக்கு வாந்தி, மயக்கம்!

தமிழகத்தில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் மக்களை பெரும் பீதியடைய செய்துள்ளது. கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடக்கப்பட்ட மக்கள், நான்காம் கட்ட ஊரடங்கில் தான் ஓரளவு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கொரோனாவில் இருந்து மக்கள் மீளாத இந்த சூழலில் விழுப்புரம் அருகே அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

விழுப்புரம் அருகே கேக் வாங்கி சாப்பிட்ட சிறுவர்,சிறுமிகள் 18 பேருக்கு வாந்தி, மயக்கம்!

விழுப்புரம் அருகே இருக்கும் பொய்கை அரசூரில் நேற்று நடமாடும் வண்டி ஒன்று வந்திருக்கிறது. அந்த வண்டியில் கேக் விற்பனை செய்து வந்த நிலையில், அப்பகுதியில் இருக்கும் சிறுவர்கள், சிறுமிகள் பலர் கேக் வாங்கி சாப்பிட்டுள்ளனர். கேக் சாப்பிட்ட உடனே அந்த 18 பேருக்கும் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவர்களை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் அனைவரும் 2 முதல் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது பெற்றோர்களை பீதியடைய செய்துள்ளது. காலாவதியான பொருட்கள் ஏதேனும் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.