“தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18+ முன்பதிவு செய்வது அவசியம்” : மதுரை மாநகராட்சி அறிவிப்பு!

“தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18+ முன்பதிவு செய்வது அவசியம்” : மதுரை மாநகராட்சி  அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை அடைந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் படிப்படியாக தொற்று குறைந்த நிலையில் நேற்று ஒரேநாளில் 1,830 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 44 ஆயிரத்து 870ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளது.

“தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18+ முன்பதிவு செய்வது அவசியம்” : மதுரை மாநகராட்சி  அறிவிப்பு!

அத்துடன் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மதுரையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசிக்காக http://maduraicorporation.co.in இணையதளம் மூலம் நேற்று மாலை முதல் முன்பதிவு செய்தவர்களில் சுமார் 300 நபர்களுக்கு இன்று தடுப்பூசி வழங்கப்படும் என்று மாநகராட்சி கூறியுள்ளது. நேற்று இரவு வரும் Token No. கொண்ட SMS மற்றும் அடையாள அட்டையுடன் இன்று முகாமில் கலந்துகொள்ளலாம்.

“தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18+ முன்பதிவு செய்வது அவசியம்” : மதுரை மாநகராட்சி  அறிவிப்பு!

இந்நிலையில் மதுரையில் 18 முதல் 44 வயதுடைய நபர்கள் தடுப்பூசி போட இன்று முதல் முன்பதிவு செய்வது அவசியம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. முன்பதிவின் போது அறிவிக்கப்படும் தேதி, நேரத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கொரோனா தடுப்பூசி போட 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்ய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.