18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்!!

 

18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்!!

பணம் செலுத்துவர்களுக்கு 60 வயது பூர்த்தியான உடன் மாதம் ரூ.3,000  ஓய்வூதியமாக வழங்கப் படும் என்றும்  இடையிலேயே தொகையை செலுத்துபவர்  இழக்க நேர்ந்தால் அவரின் குடும்பத்திற்கு மாதம் ரூ.1,500 வழங்கப் படும்

கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி ‘பிரதம மந்திரி கிஸான் மாந்தன் யோஜனா’ அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்தை பற்றிய அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் வேளாண் கூட்டுறவுத் துறை மற்றும் விவசாயிகள்  நலத்துறை விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் பங்கு பெற்று பயன் பெறலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 

Farmers pension scheme

18 வயது முதல் 40 வயது உள்ள விவசாயிகள் தங்களின் விவரங்களை ஆன்லைன் மூலம் கட்டணமின்றி இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த நபருக்கு அவரின் குடும்ப விவரங்கள் கூடிய ரசீது வழங்கப்படும். அதன் பிறகு, தனது வயதுக்கேற்றாற்போல் ரூ.50 முதல் ரூ.200 வரை மாதாந்திரம் ஓய்வூதிய தொகையாக செலுத்த வேண்டும். அந்த தொகையை வங்கி மூலமாகவோ அல்லது பிரதம மந்திரியின் கிஸான் சமான் நிதி திட்டத்தில் இணைந்திருந்தால் அதன் மூலமாகவோ, தவணை முறையில் கூட செலுத்தலாம். 

Farmers pension scheme

மேலும், பணம் செலுத்துவர்களுக்கு 60 வயது பூர்த்தியான உடன் மாதம் ரூ.3,000  ஓய்வூதியமாக வழங்கப் படும் என்றும்  இடையிலேயே தொகையை செலுத்துபவர்  இழக்க நேர்ந்தால் அவரின் குடும்பத்திற்கு மாதம் ரூ.1,500 வழங்கப் படும் என்றும் அத்துடன், இந்த திட்டத்தில் தொடர விரும்பாத விவசாயிகள் செலுத்திய பணத்தை 5 ஆண்டுகள் கழித்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.