18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

 

18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல்..!

தமிழகத்தில்  பருவ மழை கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கியது.

தமிழகத்தில்  பருவ மழை கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கியது. அதற்கு ஒரு நாள் முன்னதாகவே, மழை பெய்யத் தொடங்கி விட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன. லட்சத் தீவு கடல் பகுதியில்; உருவாகிய “மஹா ” புயலால் அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், அந்த புயல் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்தால் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இல்லை எனத் தகவல்கள் வெளியாகின. 

Rain

இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் உள்ள திருவள்ளூர், கடலூர்,திண்டுக்கல், மதுரை,  விழுப்புரம்,  திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம்,தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், காஞ்சிபுரம் ஆகிய 18 மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

மேலும், அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகவுள்ளதாகவும், அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.