18 தொகுதிகளின் இடைத்தேர்தல் எப்போது? உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

 

18 தொகுதிகளின் இடைத்தேர்தல் எப்போது? உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 தொகுதிகளின் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மதுரை: எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 தொகுதிகளின் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியாக இருக்கும் 18 தொகுதிகளில், 27 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இருப்பதாகவும் கூறி உடனடியாக அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்திட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

madurai

அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல்களை நடத்தக் கோரி தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் அனுப்பியிருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 18 எம்.எல்.ஏக்களும் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் இருப்பதாலும், அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை  நடத்த வரும் ஏப்ரல் 24 வரை அவகாசம் இருப்பதாலும் அதற்குள் தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த பதில்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.