18 கோடி ரூபாய் குலுக்கல் பரிசு: இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்!?

 

18 கோடி ரூபாய் குலுக்கல் பரிசு: இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்!?

அபுதாபியில் நடந்த பரிசு சீட்டு குலுக்கலில் இந்தியர் ஒருவருக்கு 18 கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளது.

அபுதாபி: அபுதாபியில் நடந்த பரிசு சீட்டு குலுக்கலில் இந்தியர் ஒருவருக்கு 18 கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளது.

என்ன தான் உடல் உழைப்பு இருந்தாலும், அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருந்தால் தான் உரிய நேரத்தில் எல்லாம் கிடைக்கும் என்ற எண்ணம் பல பேருக்கு உள்ளது. அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில்  இயங்கி வரும் பிக் டிக்கெட் என்ற நிறுவனம் மாதம் தோறும் குலுக்கல் போட்டி ஒன்றை நடத்தி வருகிறது. அதன்படி குலுக்கலில்  வெற்றிபெறும்  நபருக்கு, பணம் மற்றும் விலையுயர்ந்த கார் ஒன்றையும் பரிசாக வழங்குவது வழக்கம். 

bigg ticket

இந்நிலையில் பிக் டிக்கெட்  நிறுவனம் நடத்திய ஜூன் மாத குலுக்கலில், கேரளாவைச் சேர்ந்த சஞ்சய் நாத் என்பவருக்கு  இந்திய மதிப்பில் 18 கோடியே 70 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை விழுந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோல் இந்த குலுக்கலில் மேலும் 5 இந்தியர்கள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளனர்.

money

ஜூன் மாத குலுக்கலில்  வெற்றி பெற்ற  சஞ்சய் நாத் , பரிசுத்தொகையை குடும்பத்தினருக்கும், ஏழை எளியோருக்காகவும் பயன்படுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.