18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு; சபாநாயகர் கேவியட் மனுத்தாக்கல்

 

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு; சபாநாயகர் கேவியட் மனுத்தாக்கல்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செய்யலாம் என்பதால் சபாநாயகர் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

சென்னை: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செய்யலாம் என்பதால் சபாநாயகர் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

முதல்வருக்கு எதிராக மனு அளித்த 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் நேற்று தீர்ப்பளித்தார். இதனால் முதல்வர் பழனிசாமி தரப்பு உற்சாகமாகவும், தினகரன் தரப்பினர் ஏமாற்றத்துடன் இருக்கின்றனர். தீர்ப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தினகரன், தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்வதா இல்லை இடைத்தேர்தலை சந்திப்பதா என்பது குறித்து எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் சாதகமான தீர்ப்பு வெளியாகுமா? மேல் முறையீடு செய்யாமல் தேர்தலை சந்தித்தால் வெற்றி பெறுவதற்கான சூழல் நிலவுகிறதா? என சட்ட வல்லுனர்களிடமும், அமமுக கட்சியினரிடமும் தினகரன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தீர்ப்பிற்கு எதிராக தினகரன் மேல்முறையீடு செய்யலாம் என்பதால் சபாநாயகர் தனபால் கேவியட் மனு தாக்கல் செய்ய உள்ளார். உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் இந்த மனுவை தாக்கல் செய்ய இருக்கிறார்.