18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு தீர்ப்பு: வருத்தமளிக்கவில்லை, கண்கலங்கவில்லை!

 

18  எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு தீர்ப்பு: வருத்தமளிக்கவில்லை, கண்கலங்கவில்லை!

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற நீதிபதி சத்யநாராயணாவின் தீர்ப்பு  வருத்தமளிக்கவில்லை என்றும், எங்கள் நிலைப்பாட்டைத் தினகரனிடம் சொல்வோம் என்றும் தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை: 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற நீதிபதி சத்யநாராயணாவின் தீர்ப்பு  வருத்தமளிக்கவில்லை என்றும், எங்கள் நிலைப்பாட்டைத் தினகரனிடம் சொல்வோம் என்றும் தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்து தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் சென்றது.

இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி, ’18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வருத்தமளிக்கவில்லை, தீர்ப்பால் யாரும் கண்கலங்கவில்லை. டிடிவி தினகரனுடன் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 18 பேரும் ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்க உள்ளோம் .எங்கள் நிலைப்பாட்டைத் தினகரனிடம் சொல்வோம். அதன்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

இடைத்தேர்தல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ’18 பேரும் தேர்தலை சந்திக்கத் தயாராக உள்ளோம், தேர்தலைக் கண்டு அஞ்சவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில்  தினகரன் தரப்பு அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளதுள்ளது’ குறிப்பிடத்தக்கது.