18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு…!

 

18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு…!

உயர் படிப்புக்கு 50% இட ஒதுக்கீடு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்திக்  கடந்த ஆகஸ்ட் மாதம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் அரசு மருத்துவர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு, உயர் படிப்புக்கு 50% இட ஒதுக்கீடு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்திக்  கடந்த ஆகஸ்ட் மாதம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம், உங்கள் கோரிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றித் தருகிறோம் என்று அமைச்சர் விஜய பாஸ்கர் கொடுத்த வாக்குறுதியின் பேரில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். 

Govt. Doctors

அமைச்சர் வாக்குறுதி கொடுத்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப் படவில்லை. அதனால்,  தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் இணைந்து இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. அனைத்து மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டால், மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ள நோயாளிகளின்  நிலமை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மருத்துவர்களின் போராட்டம் குறித்து, தமிழக அரசு விரைவில் நடவடிக்கையை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.