18வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 20 ஆயிரம் எம்.ஏ.எச் பேட்டரி திறன் கொண்ட ரெட்மி பவர் பேங்க் இந்தியாவில் அறிமுகம்

 

18வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 20 ஆயிரம் எம்.ஏ.எச் பேட்டரி திறன் கொண்ட ரெட்மி பவர் பேங்க் இந்தியாவில் அறிமுகம்

ரெட்மி நிறுவனம் இரண்டு வேரியன்ட்களில் புதிய பவர் பேங்க் சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

டெல்லி: ரெட்மி நிறுவனம் இரண்டு வேரியன்ட்களில் புதிய பவர் பேங்க் சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் ரெட்மி நிறுவனம் இரண்டு வேரியன்ட்களில் புதிய பவர் பேங்க் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஒரு வேரியன்ட் 20 ஆயிரம் எம்.ஏ.எச் பேட்டரி திறன் கொண்டது. மற்றொன்று 10 ஆயிரம் எம்.ஏ.எச் பேட்டரி திறன் கொண்டது. இதில் 10 ஆயிரம் எம்.ஏ.எச் பேட்டரி திறன் கொண்ட வேரியன்ட் 10வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பெற்றுள்ளது. அதேபோல 20 ஆயிரம் எம்.ஏ.எச் பேட்டரி திறன் கொண்ட வேரியன்ட் 18வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பெற்றுள்ளது. இரண்டு வேரியன்ட் பவர் பேங்க் சாதனங்களுமே வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும்.

redmi brand

மேலும் இவ்விரு சாதனங்களிலும் டுயல் இன்புட்/அவுட்புட் போர்ட்கள் யு.எஸ்.பி டைப்-ஏ மற்றும் யு.எஸ்.பி டைப்-சி இன்டர்பேஸில் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருவழி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த சாதனங்களில் இடம்பெற்றுள்ளது. 10 ஆயிரம் எம்.ஏ.எச் பேட்டரி திறன் கொண்ட வேரியன்ட்டின் விலை ரூ.799 என்றும், 20 ஆயிரம் எம்.ஏ.எச் பேட்டரி திறன் கொண்ட வேரியன்ட்டின் விலை ரூ.1499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 18-ஆம் தேதி mi.com ஆன்லைன் ஸ்டோரிலும், எம்.ஐ ஹோம் ஸ்டோர்களில் ஆஃப்லைனிலும் இந்த பவர் பேங்க் சாதனங்கள் கிடைக்கும். மேலும் கூடிய விரைவில் அமேசான் தளத்திலும் இவை விற்பனைக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.