தலைநகரில் 17 அடி உயரத்தில் தங்க சிலை: அலபாய் நாய் மீதான அதிபரின் பாசம்

 

தலைநகரில் 17 அடி உயரத்தில் தங்க சிலை: அலபாய் நாய் மீதான அதிபரின் பாசம்

தோனி முதலான கிரிக்கெட் வீரர்களும் விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களும் நாய் வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். பெரும்பாலான நடிகைகள் நாய் வளர்ப்பதில் தனி ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பிரபலங்கள்தான் என்றில்லை, பெரும்பாலான மக்கள் நாய் வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துகின்ற அளவுக்கெல்லாம் பாசமழை பொழிந்து வருவதால்தான் வளர்த்த நாய் இறந்துவிட்டால் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி, இறுதி ஊர்வலம் நடத்தி அடக்கம் செய்கிறார்கள்.

தலைநகரில் 17 அடி உயரத்தில் தங்க சிலை: அலபாய் நாய் மீதான அதிபரின் பாசம்

தலைவர்களில் பெரும்பாலானவர்கள் நாய் வளர்ப்பதில் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகிய இருவருமே ரொம்ப பாசமாக நாய் வளர்த்திருக்கிறார்கள்.

தந்தை பெரியார் இதில் ஒரு படி மேலே சென்று, தான் எங்கு சென்றாலும் கூடவே அழைத்துச்சென்றுவிடுவார் தனது நாய்களை. மேடையில் அவர் ஆவேசமாக பேசும்போது அந்த நாய்கள் மெய்மறந்து தூங்கியது எல்லாம் தனி அழகுதான்.

தலைநகரில் 17 அடி உயரத்தில் தங்க சிலை: அலபாய் நாய் மீதான அதிபரின் பாசம்

துர்க்மெனிஸ்தான் அதிபரும் நாய் மீதான அதிக பாசம் கொண்டவராக இருக்கிறார். தலைநகர் அஸ்கபட் நகரின் மையத்தில் நாய்க்கு 19 அடி உயரத்தில் தங்க சிலை அமைத்திருக்கிறார்.

அந்நாட்டின் பூர்வகுடி மக்கள் தங்களது வெள்ளாடுகளையும் , செம்மறி ஆடுகளையும் மேய்ப்பதற்காக மத்திய ஆசியாவின் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த அலபாய் எனும் நாய்கள் மற்றும் குதிரைகளை வைத்திருக்கின்றனர். இவைதான் ஓநாய்களிடம் இருந்து கால்நடைகளை பாதுகாக்கின்றன.

இத்தகையை முக்கியத்துவம் வாய்ந்த இந்த அலபாய் வகை நாய்களை பற்றி அதிபர் குர்பங்குலி பெர்டிமுகமேடோவ், கவிதைகளும், கதைகளும் எழுதி இருக்கிறார்.

தலைநகரில் 17 அடி உயரத்தில் தங்க சிலை: அலபாய் நாய் மீதான அதிபரின் பாசம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இந்த நாயின் பெருமையைச் சொல்லி அதை பரிசாகவும் வழங்கி இருக்கிறார் குர்பங்குலி பெர்டிமுகமேடோவ்.

தற்போது அலபாய் வகை நாய்க்கு 17 அடியில் தங்க சிலை வைத்து, அதற்கு தனியே ஒரு விழாவும் எடுத்து உலகையே பேசும்படி செய்திருக்கிறார்.

நாயைக்கண்டாலே கல்லை எடுத்து அடிப்போருக்கும் மத்தியில், நாயை அடித்து சாப்பிடுவோருக்கு மத்தியில் இப்படியும் நாய் மீதான பாசமும் மரியாதையும் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான்.